புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை தீவிரமடைவதால் பா.ஜ.க சில அமைச்சர்களை தேடிப்பிடித்து தாக்குதல் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
பி.டி.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது: வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெடிக்குண்டு நிர்மாணித்தது,
இனப்படுகொலை நடத்தியது குறித்த ஒன்பது ஆதாரங்கள் என் வசம் உள்ளன. பாப்ரி மஸ்ஜித் தொடர்பான இரு வழக்குகளை விரைவுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கோரிக்கைதான் பா.ஜ.கவின் எங்கள் மீதான தாக்குதலின் மற்றொரு காரணமாகும்.விசாரணையை அரசு வலுப்படுத்தும் வேளையில் ஏன் இத்தகைய விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன என்பதுக் குறித்து எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக