ஜெர்மனியின் தென் பகுதியில் விலிங்னன் ஷுனிங்னன் என்ற இடத்தில் இரட்டைத் தலைகளுடன் காணப்படும் ஒரு மலை பாம்பு தான் இது.( வீடியோ ) கறுப்பு மற்றும் தங்க நிற மேனி கொண்ட இந்த மலைப் பாம்பை python regius அல்லது royal python அல்லது ball python என்று குறிப்பிடுகின்றனர். 20 அங்குல நீளமான இந்த மலைப்பாம்புக்கு இப்போது ஒரு வருடமாகின்றது. உலகில் இரட்டைத் தலைகளுடன் பிறந்துள்ள இரண்டாவது மலைப்பாம்பு இதுவாகும். இது விஷமற்றது. ஆபிரிக்காவின் காட்டுப் பகுதிகள் தான் இதன் பூர்வீகம். இவை சுமார் நான்கு அடி நீளத்துக்கு வளரக் கூடியவை, தமக்கு ஆபத்து எற்படும் பட்சத்தில் ஒரு பந்தைபோல் சுருண்டு கொள்ளக் கூடியவை. இந்த வகை மலைப் பாம்புகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கக் கூடியவை என்றும் கூறப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக