புதுடெல்லி:காந்தி படுகொலை, பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் தொடர்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள், கலவரங்கள், இனப்படுகொலைகள் போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டுவரும் ஹிந்துத்துவ பயங்கரவாத பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஊழல் எதிர்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவேன் என சமூக சேவகர், காந்தியவாதி போர்வையில் நடமாடும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
புனே பத்திரிகையாளர்கள் யூனியன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஹசாரே கூறியதாவது:ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தருவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். ஆர்.எஸ்.எஸ் எனக்கு செய்தி அனுப்பியுள்ளது. நிச்சயமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். மதம், ஜாதி, அரசியலை தாண்டிய முன்னேற்றம் தான் எங்களுடையது. முஸ்லிம், கிறிஸ்தவ தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
சில விஷயங்களில் விவாதித்த பிறகு ராம்தேவை போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதிப்போம். சமூக நன்மைகளை பரிசீலித்து சூழல்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியுள்ளது. பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து பல தடவை அவருக்கு கடிதம் எழுதிய பிறகும் பதில் கிடைக்கவில்லை. பிரதமருக்கு இதுக்குறித்து பயமில்லை. ரிமோட் கண்ட்ரோல் அவருக்கு பின்னால் இருப்பவர்களின் கரங்களில் உள்ளது. இவ்வாறு ஹசாரே கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக