தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.7.11

ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி பீட்டா அமைப்பினர் போராட்டம்

சென்னை, ஜூன். -  ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி, பீட்டா அமைப்பினர், நேற்று போரட்டம் நடத்தினர்.
மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்த போராட்டத்தில், பீட்டா அமைப்பின் உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைகள் மற்றும் மனிதர்கள் போல வேடமிட்டு அமர்ந்திருந்தனர். போராட்டம் குறித்து, பீட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி
குப்தா கூறும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்யும் வரை, காளைகள் சித்ரவதை செய்யப்படுவதும், ஜல்லிக்கட்டில் ஈடுபடுவோர் காயமடைந்து இறப்பு ஏற்படுவதும் தொடரும். இந்த ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில், 215 பேர் காயமடைந்து உள்ளனர். இதில், 154 பேர் பார்வையாளர்கள் என்றார்.
ஜல்லிக்கட்டை தடை செய்யும் வரை போராட்டம் தொடரும். அதோடு, ஜல்லிக்கட்டு நடத்துவதால் விலங்குகளும், மனிதர்களும் துன்புறுத்தப்படுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தப்போவதாக பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அரசு அளித்துள்ள அனுமதியை எதிர்த்து பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

0 கருத்துகள்: