தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.11

ஈரான் நடத்திய ரகசிய அணு ஆயுத ஏவுகணை சோதனை


அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்த, ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி ரகசியமாக அணு ஆயுத ஏவுகணை சோதனையை கடந்த வாரம் ஈரான் நடத்தியுள்ளது என இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.
மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை, இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளைச் சென்று
தாக்கும் திறன் கொண்டது என்று இங்கிலாந்து கூறியுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் வில்லியம் கேக் கூறுகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை மூன்று ஏவுகணை சோதனைகளை ஈரான் ராணுவம் ரகசியமாக நடத்தியுள்ளது.
தற்போது அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு விரோதமானது என்றார். ஆனால் இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை திசை திருப்ப இங்கிலாந்து மேற்கொள்ளும் சூழ்ச்சி இது என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: