தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.11

பால் தாக்கரேவின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு


siva sena leader
மும்பை:சிவசேனை தலைவர் பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்
கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி எஸ்.பி.எம்.திரிபாதி ஜூன் 27-ம் தேதி உத்தரவிட்டார். இதற்கிடையில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: