தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.11

பாபா ராம்தேவின் உண்ணாவிரத போரட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.- ப.சிதம்பரம்


டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில்   பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்துக்குப்  பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
 
பாபா ராம்தேவின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.மேலும், மார்ச் 2011-ல்  கர்நாடக மாநிலம் புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா ஒரு கூட்டம் நடத்தியது. அதில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகளையும், தனிநபர்களையும் ஆதரிப்பது என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
ஏப்ரல் 2-ம் தேதி ஊழலுக்கு எதிரான முன்னணியை அமைப்பதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது. பாபா ராம்தேவிற்கு  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு பின்னணியில் செயல்படுவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டார். மேலும்,சில ஊடகங்கள் அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் செயல்பாடுகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன.அந்த ஊடகங்களின் பெயரை குறிபிட்ட விரும்பவில்லை.
 
அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் செயல்பாடுகளை ஒளிபரப்புவதால்  நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் என ப.சிதம்பரம் தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக பொதுநல அமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வாக்குறுதிகளையும், பொறுப்புகளையும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைப்பதை ஆதரிக்க மாட்டேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும் என சிதம்பரம் கூறினார்.

0 கருத்துகள்: