தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.11

கழிசடையாக நான் மீண்டும்இப்படித்தான் நடனமாடுவேன் : கழிசடை சுஷ்மா சுவராஜ் சூளுரை



பாஜகவினரின் நள்ளிரவு நடனத்தை கண்டித்து காங்கிரஸ் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்துக்களுக்கு மறுப்பளித்துள்ள சுஷ்மா சுவராஜ், தான் மீண்டும் இப்படித்தான் நடமாடுவேன் என சூளுரைத்துள்ளார்.
'நாங்கள் பாடுவோம். சுற்றுவோம், நடனமாடுவோம். எமது நாட்டுப்பற்றுள்ள பாடல்களுக்கு
இறுதி மூச்சு உள்ளவரை இப்படித்தான் நடந்துகொள்வோம். இதை விமர்சிப்பவர்கள் அடிமைத்தனத்தில் மூழ்கியுள்ள மூளையில்லாதவர்கள் என அவர் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஊழல், கறுப்பு பணத்தை எதிர்த்து பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதமிருந்த போது பொலிஸாரால் அடித்து விரட்டப்பட்டார். இதை கண்டித்து பாஜகவினர் அன்றிரவு முழுவதும் தர்ணா நடத்தினர். அப்போது ஒலித்த பாடல்களுக்கு பாஜக தலைவர்களுடன் சுஷ்மா சுவராஜும் நடனாமாடினார்.

இதனை படம்பிடித்த ஊடகங்கள், போட்டுத்தாக்க, இது தான் உண்ணாவிரதமிருந்த ஒருவருக்கு ஆதரவாக நடத்தப்படும் சத்தியாகிரஹ போராட்டமா என காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்க தொடங்கினர்.
இது தொடர்பில் காங்கிரஸ் செயலர் திக்விஜய் சிங் லக்னோவில் தெரிவிக்கையில், மகாத்மா காந்தியின் சமாதி முன்னிலையில் நடனமாடி அவரையும் அவமரியாதை செய்துள்ளனர்.

எந்த ஒரு கட்சி தனது புனித சாத்வீக போராட்டத்தை இப்படி நடத்துகிறது. இக்களியாட்டங்களுக்காக பாஜகவினர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சுஷ்மா சுவராஜ் தனது பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு மறுப்பளித்து இன்று சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவிக்கையில், இதற்கெல்லாம் மன்னிப்பு கோரமுடியாது. நாட்டுப்பற்று நடனங்களை கேலி செய்பவர்கள் மூளையில்லாதவர்கள். நான் மீண்டும் இப்படித்தான் நடனமாடுவேன் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: