யோகா குரு ராம்தேவ், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.
அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.இவர் ஒரு R S S காரர் என்று குற்றச்சாட்டு எழுந்துவந்தபோதல்லாம் அதனை மறுத்துவந்தார்.இவர் நடத்தும் உண்ணாவிரத பந்தலில் கூட சாத்விரிதம்பரா மற்றும் ஏனைய RSS VHP காரர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிட தக்கது.இப்போது இவரின் திமிர்பேச்சால் இவருக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லாததுமட்டுமல்லாமல், வன்முறையில் நாட்டம் உள்ள RSS கைக்கூலி என்பது வெட்டவெளிச்சமாகிறது. இவரைபோன்றவர்களை வெளியில் நடமாடவிடாமல் கைதுசெய்து விசாரித்தால் பலமர்மங்கள் வெளிவரலாம்.மத்திய அரசு என்னசெய்யபோகிரது ? ? ?
ஆயுதம் தாங்கிபோராடப்போவதாக அறிவித்துள்ள யோகாகுரு பாபா ராம்தேவின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அக்குழுவினர் கூறுகையில், இதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக