கர்நாடகாவில், மைசூர் காட்டுப்பகுதியிலிருந்து நகரத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் தாக்கியதில் பரிதாபமாக ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 6 மணியளவில், காட்டிலிருந்து நகருக்குள் புகுந்த இரு யானைகளில், ஒன்று மார்க்கெட், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. மற்றையது மகளீர் கல்லூரி வளாகத்தினுள் புகுந்தது.
மைசூர் முதுநகரில்,
தனது வீடு அருகே வித்தியாசமாக ஏதோ சத்தம் கேட்கவே, என்ன என்று பார்ப்பதற்காக வீட்டுக்கு வெளியே வந்த 55 வயதான ரேணுகா பிரசாத் என்பவரை அவ்வழியாக வந்த யானை தந்தத்தால் குத்திக்குதறியது. உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதும் காப்பாற்ற முடியாது போயுள்ளது.
அவரது குடும்பத்து ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் டியூரப்பா அறிவித்துள்ளார். யானைகள் புகுந்ததால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதாக கர்நாடக உயர்கல்வி அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் தெரிவித்தார். சுமார் மூன்று மணிநேரத்திற்கு பிறகே யானைகளை அமைதிப்படுத்தி மைசூர் சரணாலய வனக்காவலர்கள் பிடித்தனர்.
யானைகள் நகருக்குள் வரத்தொடங்கியதும் வேடிக்கை பார்க்கவென பின்னால் நூற்றுக்கணக்கில் மக்கள் கூட்டம் குவியத்தொடங்கிய போதும், குறித்த நபரை தந்தத்தால் யானை தாக்கத்தொடங்கிய போது ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை. யானைகளை பிடிப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகளும் உடனடியாக அங்கு சமூகமளித்து துரித நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்விரு இரு கவனயீனங்களுக்கும், யானையின் தந்தத்தால் குத்தப்பட்ட நபரின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டுள்ளது என நகரவாசி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
யானைகள் வசிக்கும் வனப்பகுதிகளுக்குள், மக்கள் நடமாட்டம், வாகன போகுவரத்து என்பன இடையூறாக இருப்பதால் யானைகள் நகருக்குள் வந்துவிடுவதாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக