தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.6.11

பாபா ராம்தேவ் நல்ல வியாபாரி: காங். தலைவர் திக்விஜய் சிங் தாக்கு


ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவது, காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாபா ராம்தேவை
சன்னியாசி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு நல்ல வியாபாரி. யோகா சொல்லி கொடுப்பதற்கு கூட அவர் விதம், விதமாக பணம் வசூலிக்கிறார். யோகா வகுப்பில் முன்வரிசையில் இருக்க ரூ.50 ஆயிரம் வசூலிக்கிறார். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கடைசி வரிசையில்தான் இருக்க முடியும்.
இது வியாபாரம் இல்லாமல் வேறு என்ன?   ராம்தேவால் காங்கிரஸ் குழப்பமோ, பீதியோ அடைய வில்லை. அதனால்தான் நாங்கள் அவருடன் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் வேறு மாதிரி நினைத்திருந்தால், இந்நேரம் ராம்தேவ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்திருப்பார். அவரை நினைத்தோ, அவரது போராட்டத்தை கண்டோ நாங்கள் பயப்பட வில்லை. அதனால்தான் அவர் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்.
ஊழலை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது. இதை ராம்தேவ் புரிந்து கொண்டு பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். ரொம்பவும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
ராம்தேவை கைது செய்து இருப்போம் என்ற ரீதியில் திக்விஜய்சிங் பேசி இருப்பது, ராம்தேவையும், அவரது சீடர்களையும் மிரட்டுவது போல உள்ளது என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

0 கருத்துகள்: