இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் தாரூஸ்மன் தலைமையில் ஐ.நா நிபுணர் குழுவினர் தயாரித்த அறிக்கையானது, அரசியல் ரீதியான காரணிகளை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் விமர்சித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஏதும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இஸ்ரேலியர்கள் போர்க்குற்றம் புரிந்ததாக, இதே போன்றதொரு அறிக்கையை முன்னர்
ஐ.நா வெளியிட்டது. எனினும்
தனது தரவுகளில் உண்மையில்லை என அக்குழுவின் தலைவர் நான்கு மாதங்களின் பின் ஒப்புக்கொண்டார். இஸ்ரேல் மீது முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுக்களும் வாபஸ் பெறப்பட்டன.ஐ.நா வெளியிட்டது. எனினும்
இவ்வாறான அறிக்கைகள், உண்மையான அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை. அரசியல் பின்னணிகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் லிபியா,சிரியா போன்ற நடுகளை ஐ.நா கண்டுகொள்வதில்லை. இலங்கை விடயத்தில் இலங்கை அரசே உரிய தீர்வுகளை வழங்கும் என நம்புகிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முற்பகுதியில் இஸ்ரேல் - இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்ததும், இதன் மூலம் இலங்கை விவசாய துறைக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது நினைவில் தக்கது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் - ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகவும் ஐ.நா குற்றம் சாட்டியிருந்தது.
அப்போது இது தொடர்பில் உள்நாட்டு விசாரணை அறிக்கை ஒன்றை பக்காவாக தயார் செய்த இஸ்ரேல், ஐ.நாவிடம் அதை சமர்ப்பித்ததன் மூலம் தன்மீதான சர்வதேசத்தின் நல்லெண்ணத்தை அதிகரிக்க செய்திருந்தது.
இதே நடைமுறையை பின்பற்றியே, இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை இலங்கை அமைத்து விசாரனை செய்யத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக