கருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்தப்படுவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சோவியத் ரஷ்யாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு
நிறுத்தப்பட உள்ளது. இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும், இந்த ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என நேட்டோ நாடுகளை வலியுறுத்தியது. ரஷ்யாவின் இந்த கோரிக்கையை ஏற்க நேட்டோ நாடுகள் மறுத்து விட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா போர்க்கப்பல் கருங்கடலுக்குள் நிலைநிறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக