தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.11

தாய்ப்பால் கொடுக்கும் அர்ஜென்டினா குளோனிங் பசு


உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை
குளோனிங் முறையில்
உருவாக்கியுள்ளது. இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால், தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: