தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.6.11

இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க தாக்குதலில் பலி! - ஹூஜி அமைப்பு உறுதிப்படுத்தியது



மும்பை தாக்குதலில் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படும் இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க படைகள் நடத்திய தானியங்கி விமான தாக்குதலில் கொல்லப்பட்ட தகவலை அவருடைய ஹூஜி அமைப்பு மற்றும் பெஷாவர் அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், வானா பஜார் எனும் இடத்திற்கு அருகில் காஷ்மீரி, பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி ஆளில்லா விமானங்களை கொண்டு அமெரிக்க படைகள்
ஏவுகணைத் தாக்குதலை நடத்தின
. இதில் இலியாஸ் காஷ்மீரி உட்பட  9 போராளிகள் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரி தவிர ஏனையோர் அனைவரும் பஞ்சாபி தலிபான்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பின்லேடனுக்கு பிறகு அல் கைதா இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு தகுதியானவராக கணிக்கப்பட்ட  இலியாஸ் காஷ்மீரி,  ஹர்கத் - உல் ஜிஹாத் இ-இஸ்லாமி (ஹூஜி) இயக்கத்தின் தலைவரும் ஆவார்.

மும்பை தாக்குதலில் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக இவரை கருத முடியும் என டேவிட் ஹெட்லி அண்மையில் நியூயோர்க் நீதிமன்றில் விசாரணைகளலும் தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவுஅமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தான் கராச்சி கடற்படை விமான தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, மூளையாக இவரது ஹூஜி இயக்கமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களுக்கு முன் குறித்த வானா பஜார் இடத்துக்கு காஷ்மீரி வந்ததிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி, இது பற்றி தனக்கு எவ்வித தகவலும் தற்சமயத்துக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: