தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.6.11

RSS. ராம்தேவ் நள்ளிரவில் கைது - ஆதரவாளர்கள் மனிதச் சங்கிலி அமைத்து தடுக்க முயன்றதால் கலவரம்?! (வீடியோ)



ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் தொடர்ந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று நள்ளிரவு ராம்லீலா மைதானத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.(வீடியோ)
நேற்று நண்பகல், மத்திய அரசுடன் நடந்த இறுதிப்பேச்சுவார்த்தையும்
, தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என அதிரடியாக அறிவித்திருந்தார் பாப ராம்தேவ்.
இந்நிலையில் அவரை டெல்லியை விட்டு உடனடியாக வெளியேறும் படி காவற்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அவர் வெளியேற மறுத்ததுடன், தன்னை கைது செய்ய வேண்டுமானால் கைது செய்யுங்கள். ஆனால் பகல் நேரத்தில் கைது செய்யுங்கள் என ஆக்ரோஷமாக தெரிவித்தார். எனினும் நேற்று நள்ளிரவே அவர் உண்ணாவிரதமிருந்து வந்த ராம்லீலா மேடையை சுற்றிவைளைத்த காவற்துறையினர், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சித்தனர்.


இதனால் ராமீலா மைதானம் கலவர பூமியாக மாறத்தொடங்கியது. ராம்தேவ் மேடையை விட்டு கீழே குதித்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டார். இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் ஆதரவாளர்களை களைத்தனர். இதனால் அவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓட்டம் பிடிக்க, ராம்தேவை கைது செய்தனர்.


இன்று காலை பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட ராம்தேவ், அங்கிருந்து பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம், டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


டெல்லிக்குள் மீண்டும் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், அவர் டெல்லிக்கு வந்து போராட்டத்தை தொடருவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


நாங்கள்  யோகா முகாம் நடத்தவே  ராம்லீலா மைதானத்ததை அவருக்கு கொடுத்திருந்தோம். மாறாக அவர் போராட்டம் நடத்த தொடங்கினார். அந்த இடத்த விட்டு அமைதியான முறையில் கலந்து செல்லுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் அவர் கேட்கவில்லை. ராம்தேவின் ஆதரவாளர்கள் எம்மீது கல்வீசி  தாக்கத்தொடங்கினர். இதனால் தான் நாங்கள் திருப்பி தாக்கினோம் என பொலிஸார் தமது வாதத்தை ஒப்புவித்தனர்.


இக்கலவரத்தில், ராம்தேவின் ஆதரவாளர்கள் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு கை, கால் முறிவு, தலையில் காயம் என்பனவும் ஏற்பட்டுள்ளன.


தற்சமயம் அவர்கள் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கும், அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஊழல், கறுப்பு பணம் என்பவற்றிற்கு எதிராக (நேற்று) சனிக்கிழமை காலைமுதல் ராம்தேவ் உண்ணாவிரதத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: