தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.6.11

தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர், தங்களின் அசையாச் சொத்து விவரங்களை, வெளியிட்டனர்


தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி

தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர், தங்களின் அசையாச் சொத்து விவரங்களை, வெளியிட்டனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியை, தற்போது, தேர்தல் கமிஷனர்களும் பின்பற்றியுள்ளனர். தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு, குர்கான், கிரேட்டர் நொய்டா
மற்றும் ஆக்ராவில், தலா ஒரு வீட்டு மனைகள் என, மூன்று வீட்டு மனைகள் உள்ளன.
ஹூடா அமைப்பு, 1980ல், குர்கானில் உள்ள செக்டார், 17ல், 1,500 சதுர அடி நிலத்தை, 63 ஆயிரத்து, 89 ரூபாய்க்கு, குரேஷிக்கு ஒதுக்கியது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 1.75 கோடி ரூபாய். கிரேட்டர் நொய்டாவில் உள்ள, 1,050 சதுரடி கொண்ட வீட்டு மனையை, 2006ல், 36 லட்சத்திற்கு, குரேஷி வாங்கினார்.
சேமநல நிதி சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் மூலம், இதை வாங்கினார். இதேபோல், ஆக்ராவிலும், 1,575 சதுரடி நிலத்தை, தன்னுடைய சேமிப்பில் இருந்து, எட்டு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
தேர்தல் கமிஷனரான சம்பத், 1986ல், ஐதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில், 436 சதுர மீட்டர் கொண்ட வீட்டு மனையை, 47 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
அதன் தற்போதைய மதிப்பு, இரண்டு கோடி ரூபாய். இந்த வீட்டு மனையில் கட்டப்பட்டுள்ள வீடு மூலம், அவருக்கு, ஆண்டுக்கு, 7.50 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது.
இதுதவிர, ஆந்திர மாநிலம் குட்டாலா பேகம் பேட்டையில், 418 சதுர மீட்டர் நிலத்தையும், அதன் மீது கட்டப்பட்டுள்ள வீட்டையும், 1991ல், 68 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதன் தற்போதைய மதிப்பு, 95 லட்ச ரூபாய்.
இந்த சொத்திலிருந்து, ஆண்டுக்கு, 3.60 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. ஐதராபாத்தின், யெல்லாரெட்டிகுடாவில், 1,957 சதுர அடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை, 18 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு, 40 லட்ச ரூபாய். மற்றொரு தேர்தல் கமிஷனரான பிரம்மாவிற்கு, அசாமில் உள்ள கோக்ராஜ்கரில், 40 பிகாஸ் அளவுக்கு, விவசாய நிலம் உள்ளது. இதன் மதிப்பு, எட்டு லட்ச ரூபாய். அசாமின் கோசாய்கான் நகரில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. இது, அவரின் மூதாதையர் சொத்து.
ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், 1989ல், கூட்டுறவு சங்கம் ஒன்றின் மூலம், எட்டு லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு, 3.80 கோடி ரூபாய். இந்த சொத்தின் மூலம், மாதம் ஒன்றுக்கு, ஒரு லட்ச ரூபாய் வாடகை வருகிறது.

0 கருத்துகள்: