ஒசாமா தங்கியிருந்தது அபுட்டபாத் நகரில் தான் என்பது, அமெரிக்க சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அல் கைதா சந்தேக நபர் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கடும் Waterboarding சித்திரவதை முலமே, கமாண்டே படைகளுக்கு தெரியவந்ததாகவும்,
ஒசாமை தேடிப்பிடித்து கொன்றதற்கு உண்மையில் ஒபாமா அரசு பெருமை கொள்வதில் அர்த்தமில்லை எனவும், முன்னாள் அமெரிக்க நீதித்துறையின் பேச்சாளர் ஜோன் யூ (John Yoo) தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வோட்டர் போர்டிங் சித்திரவதை செயன்முறை
சாதாரன ஒரு சித்திரவதை நடவடிக்கை தான் என்ற போதும், மூச்சுத்திணறல் உட்பட கடுமையான உடல், மன வலிகளை தோற்றுவிக்கும் Waterboarding சித்திரவதைக்கு ஒபாமா ஆட்சியின் போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் அதிபர் புஷ் ஆட்சியிலிருந்த போது, அல் கைதாவுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டால், ஒசாமா பற்றிய தகவல்களை அவர்களிடமிருந்து அறிந்துகொள்வதற்காக இச்சித்திரவதை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நிர்வாணமாக 50 பாகை வெப்பத்தில் நிற்க வைத்தல், திடீஎரென குளிர்தண்ணீரில் குளிப்பாட்டி உடல் வெப்பத்தை இழக்க செய்தல், Waterboarding சித்திரவதை செய்தல் (குறித்த நபரை படுக்கவைத்து, முகத்தை துணியால் கட்டி மூக்குத்துழைகளுக்கு நீர் ஊற்றல் - இதன் போது நீருக்குள் மூழ்கடிப்பது போன்ற ஒரு மாய கற்பனைப்பயம் உருவாகும்) என கடும் சித்திரவதைகளின் விளைவே இப்போது ஒசாமா பிடிபட்டிருப்பதாக, தனது வலைப்பதிவில் யூ தெரிவித்திருந்தார்.
எனினும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதை முற்றாக மறுத்துள்ளது. 2003இல் இப்படி Waterboarding முறை மூலம் எமக்கு ஒசாமா இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்திருக்குமாயின், அந்தவருடமே அவரை பிடித்திருக்கலாமே என வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜே கார்னேய் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக