தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.5.11

அதிபர் சர்தாரியை பழிக்குப்பழி வாங்குவோம்: தலீபான்கள் சூளூரை


இஸ்லாமாபாத் அல்கொய்தா தலைவர் பின்லேடனை கொன்றதற்கு பாகிஸ்தான் தலைவர்களை குறிப்பாக அதிபர் சர்தாரியை பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்காவையும் பழிக்குப்பழி வாங்குவோம் என்று பாகிஸ்தான் தலீபான்கள் சூளூரைத்து உள்ளனர்.
பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் அமெரிக்க ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் தீவிரவாதிகள் ஆத்திரம் அடைந்து உள்ளனர். பின்லேடனை கொன்றதற்காக பாகிஸ்தான் அதிபர் சர்தாரியையும் மற்ற பாகிஸ்தான் தலைவர்களையும், பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளையும் பழிக்குப்பழி வாங்குவோம் என்று பாகிஸ்தான் தலீபான் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட ஆடியோ தகவலில் பாகிஸ்தான் தலீபான் செய்தி தொடர்பாளர் அக்சானுல்லா அக்சான் பஷ்டோ மொழியில் கூறி இருப்பதாவது:-

முஸ்லிம்களின் தலைவரான பின்லேடனை சுட்டுக்கொன்றதற்காக நாங்கள் பழிக்குப்பழி வாங்குவோம். தலீபான்களின் முதல் குறி பாகிஸ்தான் தான். அடுத்த குறி தான் அமெரிக்கா. தலீபான்களின் தாக்குதல் பட்டியலில் பாகிஸ்தான் தலைவர்கள் இருக்கிறார்கள். தலீபான்கள் அதிபர் சர்தாரியையும், பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளையும் முதலில் தாக்கி அழிப்பார்கள்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிரை நாங்கள் தான் கொன்றோம். 3 மாதங்கள் திட்டம் போட்டு தற்கொலை தீவிரவாதியை அனுப்பி அவரை கொன்றோம். 3 மாதங்களில் நாங்கள் எங்கள் லட்சியத்தை நிறைவேற்றினோம். ஆனால் அமெரிக்கா பின்லேடனை கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் தேடி அலைந்தது. இதனால் அது மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபடுவதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அக்சானுல்லா அக்சான் கூறினார்.
பாகிஸ்தான் தலீபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு உடையது என்று அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி கூறுவது உண்டு. இரு இயக்கங்களுக்கும் பாகிஸ்தானின் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் பதுங்கி இருக்கின்றன என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: