சவுதி அரேபியா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் உட்பட பெரும்பாலான இஸ்லாமிய சமூகத்தினர், ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டதை மறுத்துள்ளதுடன் அவர் இன்னமும் உயிரோடு இருப்பதாகவே கருதுகின்றனர் என The Wall Street Journal தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அபோத்பாத்தில் இடம்பெற்ற அமெரிக்க படை தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது சடலம் டி.என்.ஏ பரிசோதனையின் பின் கடலுக்கடியில் புதைக்கப்பட்டதாகவும் அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ள போதிலும், இதுவரை ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் எந்தவொரு புகைப்படத்தையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
ஒசாமா கொல்லப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை : தலிபான்கள்
நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, ஒசாமாவின் மரணம் குறித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்ட தலிபான்கள், ஷேக் ஒசாமாவின் மரணம் குறித்து அமெரிக்கா இதுவரை ஆதாரபூர்வன சாட்சி ஒன்றையும் நிரூபிக்கவில்லை. எனவே ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்த தவறியுள்ள நிலையில், அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தனர்.
ஒசாமா பதுங்கி வாழ இந்த இடத்தை தெரிவு செய்திருக்க மாட்டார் : அபோத்தபாத் நகரவாசிகள்
அபோத்தபாத் நகரில் வசிக்கும், வழக்கறிஞர்கள், வர்த்தகர்களும் இதே போன்று கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஒபாமா அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் இப்படி ஒரு விளம்பர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்த்தான் தான் ஒசாமாவை பாதுகாத்து வைத்திருந்தது என அமெரிக்கா போடும் நாடகமிது. அருகில் பாகீஸ்த்தான் இராணுவ பயிற்சி நிலையம் இருப்பதால், அபோத்தபாத் நகரை பின் லேடன் ஒரு போதும் தனது மறைவிடமாக தெரிந்தெடுத்திருக்க மாட்டார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒசாமாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிடுமா?

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்க இராஜாங்க தினைக்களம், பின்லேடனின் சடலம் தொடர்பில் ஒரு புகைப்படத்தையாவது வெளியிட வேண்டுமென பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், விரைவில் புகைப்படம் ஒன்று வெளியிடப்படும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்றிரவு அறிவித்திருந்தார். எனினும் புகைப்பரம் மிகவும் கோரத்தன்மையாக இருப்பதால் இது வெளியிடப்படுமா என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடிக்கிறது.
பின்லாடனுக்கு ஆதரவு தந்தது பாகிஸ்த்தானே : விக்கிலீக்ஸ்
அல் கைதா தலைவர் பின்லாடனுக்கு ஆதரவு தந்து, அவர் பதுங்கியிருப்பதற்கு, பாகிஸ்த்தான் அரசு உதவியது எனவும், பின்லாடன் மறைவிடம் குறித்து நன்கு தெரிந்திருந்த போதிலும், அதை பாகிஸ்த்தான் வெளிக்காட்டவில்லை எனவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு, அப்போதைய பாகிஸ்த்தான் அதிபர் முஷாரப், ஒசாமா பாகிஸ்த்தானில் இருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பிய போதும், ஒருவாரத்திற்குள் பிரதமர் கியானி, அதற்கு மறுப்பு தெரிவித்து, பின்லாடன், அவரது கூட்டாளிகள் யாரும் இங்கில்லை தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
அபுத்தபாத் பற்றி 2009 இலேயே அறிவித்தோம் : பாகிஸ்த்தான் பல்டி
பின்லேடன் தங்கி இருந்த கட்டிடம் குறித்து 2009 இலேயே அமெரிக்க சி.ஐ.ஏவுடனும், பிற நட்புறவு புலனாய்வு ஏஜென்சிகளுடனும் பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ நிறுவனம் தகவல்களை பகிர்ந்துகொண்டு உள்ளது என பாகிஸ்த்தான் அரசு தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்த்தான் நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருவதாகவும், பின் லேடன் கொல்லப்பட்டது இதில் முக்கிய மைல் கல் எனவும் பாகிஸ்த்தான் அரசு தெரிவித்துள்ளது. எனினும் தன்னிச்சையாக அமெரிக்க கமாண்டோ படைகள் தாக்குதல் மேற்கொண்டு பின்லேடனை சுட்டுக்கொன்றது சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளது.

நிராயுத பாணியாகவே இருக்கும் போதே ஒசாமா கொல்லப்பட்டார் : அமெரிக்கா
ஒசாமா கொல்லப்படும் போது அவரிடம் எந்தவொரு ஆயுதங்களும் கையிலிருக்கவில்லை எனவும், நிராயுதபாணியாக இருக்கும் போதே கொல்லப்பட்டார் எனவும், அத்தாக்குதலை நடத்திய இராணுவ குழுவினரால் தகவல் கசிந்துள்ளது. பின்லாடன் அறைக்கு இராணுவம் நுழைந்த போது அவரது காலிலேயே முதலில் சுட்டதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

'Obama got Osama' சூடுபிடிக்கும் டீஷேர்ட் டிசைன்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று Obama got Osama எனும் பெயரில் டீஷேர்ட் ஒன்றை அச்சடித்து இருக்கிறது.
ஒசாமா பின் லேடனின் மரணத்தை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம், அந்நிறுவனத்தின் பெரும்பாலான சீருடைகளில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு தயாராகி வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக