தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.11

சி.ஐ.ஏ உளவாளிகளை திரும்ப அழைக்கவேண்டும் – பாகிஸ்தான்


0412-pakistan-drone-attacks_full_380
வாஷிங்டன்:பாகிஸ்தானில் சி.ஐ.ஏ ஏஜண்டுகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். ஆப்கான் எல்லையில் தொடரும் ட்ரோன் (ஆளில்லா விமானத் தாக்குதல்) தாக்குதலை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
சி.ஐ.ஏ தலைவர் லியோன் பனேட்டாவுடன் சந்திப்பை நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தலைவர் அஹ்மத் ஷுஜா பாஷா வாஷிங்டனுக்கு
சென்றுள்ளார். விர்ஜீனியாவில் சி.ஐ.ஏவின் தலைமையகத்தில் இருவரும் சந்திப்பை நிகழ்த்தியபிறகு பெயர் வெளியிட விரும்பாத பாக்.அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் சி.ஐ.ஏ அதிகாரிகள், சிறப்பு படை அதிகாரிகள் உள்பட 335 பேரை திரும்ப அழைக்க வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் சி.ஐ.ஏ ஏஜண்டுகளின் 40 சதவீதமாகும் இது.
இவ்வருட துவக்கத்தில் இரண்டு பாகிஸ்தானியர்களை எவ்வித காரணமுமின்றி சுட்டுக் கொலைச்செய்த சி.ஐ.ஏ ஏஜண்ட் ரேமண்ட் டேவிஸை விடுதலைச் செய்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அமெரிக்கா பாகிஸ்தானில் நடத்திவரும் ட்ரோன் தாக்குதலில் ஏராளமான சாதாரண மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனால் பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் கயானியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில்தான் சி.ஐ.ஏவின் ஏஜண்டுகளை குறைக்க வேண்டுமென அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் இத்தகையதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

0 கருத்துகள்: