தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.4.11

தமிழகம் முழுவதும் 75.2% வீதம் வாக்குப்பதிவு!


தமிழகத்தின் இன்று நடந்து முடிந்துள்ள சட்ட சபை தேர்தலில், மாநிலம் முழுவதுமாக சராசரியாக 75.2% வீத விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணைக்குழு அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தகவல் இல்லை என தெரிவித்துள்ள அவர் பல இடங்களில் மின்னணி எந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியதாகவும், இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி, இன்று கோபாலபுரம் சாரதா மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துவிட்டு, வெளியில் வந்த போது நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டது பற்றி உங்கள் கருத்து?

பதில் : கடுமையாக நடந்துகொண்டதே தவிர பாரபட்சமாக நடந்துகொண்டதாக சொல்ல மாட்டேன்.

தேர்தல் அதிகாரிகளை பயமுறுத்தியதாக ஒரு புகார் வந்திருக்கிறதே, அதைப் பற்றி?

பதில்: ஜெயலலிதா பயமுறுத்தியதாகவா? அதைப் பற்றி அவரையே கேளுங்கள்.

கேள்வி: வன்முறைக்கு தி.மு.க. முயற்சி செய்வதாகவும் நேற்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களே?

பதில்: அதைப்பற்றி நான் விளக்கம் அளித்திருக்கிறேன். நேற்றைக்குக் கூட விக்கிரவாண்டி தொகுதியிலே தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவரை அ.தி.மு.க.வினர் கொலை செய்திருக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது. யார் வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: