தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.11

அமெரிக்காவி​ன் சதித்திட்ட​ம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை​யுடன் இருக்கவேண்​டும் – அஹ்மத் நஜாத்


Mahmud_Ahmadinejad_181110_8
டெஹ்ரான்:அமெரிக்காவும்,இஸ்ரேலும் இல்லாத புதிய மத்திய கிழக்கு உருவாகும் என எதிர்பார்ப்பதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டம் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானி-அரபு மற்றும் ஷியா-சுன்னி ஆகிய பிரிவினை மோதல்கள் வெடித்துள்ள சூழலில் நஜாத் இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.
ஈரானில் சிஸ்தான்-பலூசிஸ்தான்
மாகாணத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு நகரமான ஸஹதானில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அஹ்மத் நஜாத் உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் கூறியதாவது: “எதிர்காலத்தில் அமெரிக்கா, ஷியோனிஸ்டுகள் மற்றும் அவர்களது கூட்டணி நாடுகள் இல்லாத புதியதொரு மத்திய கிழக்கு உருவாகும். மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளும், அரசுகளும் எப்பொழுதும் அமெரிக்காவின் சதிக்குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
அமெரிக்காவின் மைதானத்தில் சென்று நாம் ஆடிவிடக் கூடாது. இஸ்ரேலின் முடிவு நெருங்கி விட்டது. இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் குறிப்பாக ஈரான் காலனியாதிக்க ஆணவமிக்கவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகவில்லை. ஈரான் மக்களும் இப்பிராந்தியத்திலுள்ள நாடுகளும் இஸ்ரேல் நீடிப்பதைக் குறித்து கவலைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவே உள்ளனர்.  அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக இறுதி வரை அவர்கள் போராடுவார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக சர்வாதிகாரிகளுக்கு இந்த ஆதிக்க சக்திகள்தாம் முக்கிய ஆதரவாளர்களாக திகழ்கின்றார்கள். தற்பொழுது அவர்கள் இப்பிராந்திய மக்களிடையே இஸ்ரேலை பாதுகாப்பதற்காக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதையை தூவுகிறார்கள். இந்த ஆதிக்க சக்திகள் ஜோர்டானை பிரிக்க சூழ்ச்சி மேற்கொண்டுள்ளனர். அங்கு இரு அரசுகளை உருவாக்குவதே அவர்களது திட்டம்.

இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுக்கெதிரான சதித்திட்டங்கள் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் ஒருபோதும் சியோனிஷ அரசை அங்கீகரிக்கமாட்டார்கள்.” இவ்வாறு அஹ்மத் நஜாத் உரை நிகழ்த்தியுள்ளார்.

0 கருத்துகள்: