பாரம்பரியமான நாட்டில் பொது இடங்களில் எத்தகைய ஆடைகள் அணியலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து அறிக்கை வெளியிடுமாறு ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து அந்நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மினி ஸ்கர்ட் அணிய தடை விதிக்க வேண்டும் என்ற மக்களின் புகார்களை பரிசீலனை செய்தது. இந்த பரிசீலனையை ஒரு கமிட்டிக்கு அனுப்பி பொது இடங்களில் எப்படிபட்ட ஆடைகள் அணியலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் பிடிஐக்கு தெரிவித்தார்.
பெண்கள் ஆடைகள் குறித்து அரசு இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. ஆனால் லக்பிமா என்னும் செய்தித்தாள் மினி ஸ்கர்டுக்கு தடைவிதிப்பது குறித்து அரசு எண்ணுவதாகத் தெரிவித்துள்ளது என்று அமைச்சக செயலாளர் நிமல் ரூபாசிங்கே கூறினார்.
இது குறி்த்து அமைச்சர் டி.பி. ஏகநாயகே கூறியதாக லக்பிமா வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,
மதம் மற்றும் சலாச்சார பிரநிதிகளும், குழுக்களும் பெண்கள் மினி ஸ்கர்ட் அணிவது நமது கலாச்சாரத்தை சீரழித்துவிடும் என்று வருத்தம் தெரிவித்து எனக்கு எழுதியுள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிலைமை மேலும் மோசம் அடைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் பெண்கள் ஆபாசமாக போஸ் கொடுத்திருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க பாப் பாடகர் அகானின் இசை வெளியீடு ஒன்றில் பிகினி அணிந்த பெண்கள் புத்தர் சிலையைச் சுற்றி நடனமாடுவது போல் படமாக்கப்பட்டதற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு இலங்கையில் கச்சேரி நடத்த விசா மறுக்கப்பட்டுள்ளது.
200 உள்நாட்டு ஆபாச இணையதளங்களை தடை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக