தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.10

இந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை.

காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போராட்டத்தில் அவருக்கு துணையாக அபுல்கலாம் ஆசாத், முஹம்மது அலி, ஷவுக்கத் அலி,ஹஸ்ரத் மொஹானி, ஸெய்புத்தீன் கிச்லு, டாக்டர்.எம்.எ. அன்ஸாரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அறிஞர்களுடன் ஒன்றிணைந்தார். அதன் பயனாக, 1920 ஆம் ஆண்டு கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்கள் உருவாகின.

கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களின் முக்கிய செயல்திட்டமாக ஆங்கிலேய அரசுக்கு வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தினார் காந்திஜி. இந்திய குடிமக்களை பொருளாதார ரீதியாக சுரண்டும், துயரத்தில் ஆழ்த்தும் அந்நிய ஆக்கிரமிப்பு அரசுக்கு வரி கட்டாதீர்கள் என்ற வேண்டுகோளை பெரும்பாலானோர் நடைமுறைப்படுத்தியது ஆங்கில அரசுக்கு சவாலாக விளங்கியது.

இதனை எழுதும் வேளையில் நம்முன்னால் நிழலாடுகிறது ஒரு நிகழ்வு. ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் முதன்முதலாக வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தியது காந்திஜியோ அல்லது கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களோ அல்ல என்பதுதான்.இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களின் எங்கோ ஒரு மூலையில் கவனிப்பாரற்று கிடக்கும் ஓர் தீரமிக்க முஸ்லிம் தலைவர்தான் அவர். ஆம், காந்திஜியும், அவரது தோழர்களும், அவர்கள் உருவாக்கிய இயக்கங்களெல்லாம் ஆங்கிலேயனுக்கு எதிராக போராட துணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் கேரளாவின் தெற்கு மலபாரில் பொன்னானி தாலுகாவில் ஒரு தீரமிக்க முஸ்லிம் வீரர் உமர்காழிதான் அவர்.

ஆங்கிலேயனுக்கு வரிசெலுத்தமாட்டோம் என அறிவித்த காரணத்தினாலேயே சிறைவாசத்தை அனுபவித்தவர் அவர். அரபு மொழியிலும், மலையாளத்திலும் அழகான கவிதைகளை வடித்துள்ள மார்க்க அறிஞரான உமர்காழியை இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறிலிருந்து மாற்றி நிறுத்தவே முடியாது என்பதுதான் உண்மை. துரதிர்ஷ்டவசத்தால் அவர் இந்திய மக்களிடம் பிரபலமடையாமல் போனார்.

காந்திஜி உள்ளிட்ட கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இது இயக்கத் தொண்டர்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது.
போராட்டம் நாள் செல்லச் செல்ல தீவிரமடையத் துவங்கியது.அரசு கல்விக் கூடங்களையும், நீதிமன்றங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பது இப்போராட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் உள்ளிட்டோர் படிப்பை உதறினர். ஜமால் இபுராஹீம் சாஹிப் என்பவர் மிக உயர்ந்த கெளரவ மாஜிஸ்ட்ரேட் பதவியை 1920 ஆம் ஆண்டு ராஜினாமாச் செய்தார்.

தேச விடுதலைக்காக, ஆங்கிலேயருக்கு தங்களது தார்மீக எதிர்ப்பை காட்டுவதற்காக தங்கள் பதவிகளையும், அந்தஸ்துகளையும் துறந்த முஸ்லிம்கள் பலர் உள்ளனர். கல்வி நிலையங்களை விட்டு வெளிவந்த பலரும் கல்வியில் சிறந்து விளங்கியவர்கள். இவர்கள் தங்கள் கல்வியைத் தொடரவேண்டும் என்பதற்காக குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா போன்ற கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன.

இந்த நேரத்தில் நாம் முக்கியாமாக ஒன்றை நினைவு கூற வேண்டியது உள்ளது. காந்திஜி நடத்திய சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம்கள் தங்கள் படிப்பையும், உயர் பதவிகளையும் துறந்துவிட்டு உறுதுணையாக இருந்தார்கள். ஆனால் இந்த பிராமண வந்தேறி பாசிச ஹிந்துத்துவா சிந்தனை படைத்தவர்களோ வெள்ளைகாரர்களுக்கு சேவகம் செய்து உயர் பதவிகளில் இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு சுதந்திர போராட்டவிரர்களை காட்டி கொடுத்தார்கள். பின்னர் தங்கள் ஹிந்து ராஜிய கனவுக்கு காந்திஜி இடைஞ்சலாக இருப்பார் என்று அவரையும் சுட்டு கொன்றார்கள்.

வெளிநாட்டு ஆடைகள் புறக்கணிப்பு, மதுவை ஒழிப்பு ஆகியவையும் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய பகுதிகளாக விளங்கவேண்டுமென காந்திஜியும், மெளலானாக்களும் தீர்மானித்தனர். ஏராளமானோர் தங்களுடைய விலைமதிப்புள்ள ஆடைகளை தீக்கிரையாக்கினர். பிரிட்டீஷ் துணி ஆலை முதலாளிகளை தோற்கடிக்கவும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மைக்கு ஓரளவு பரிகாரம் காணவும் எல்லா இந்தியர்களும் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைகளையே அணியவேண்டும் என காந்திஜி உபதேசித்தார். இவ்வாறு நெய்யப்பட்ட ஆடை கடினமாக இருந்தாலும் மதிப்புடன் அதனை அணியத் துவங்கினர் இந்திய மக்கள். இந்த ஆடைக்கு கத்ராடை எனப் பெயரிட்டவர், என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்திஜியால் வர்ணிக்கப்பட்ட அலிசகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள்தான். அவர்தான் தான் கைராட்டையில் நெய்த துணியை காந்திஜிக்கு அளித்து, இதனை கத்ராக(கெளரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் இந்த ஆடைக்கு கதர் ஆடை என பெயர் வந்தது.

ஒரு கோடி ரூபாயை திலகர் சுயராஜ்ஜிய நிதிக்கு வழங்கியதற்காக, முஸ்லிம் தொழிலதிபர் உமர் சுப்ஹானியின் ஆலைத்தொழிலை முடக்குவதற்கு ஆங்கிலேய அரசு செய்த சதியால் சுப்ஹானிக்கு அன்று ஏற்பட்ட இழப்பு மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம்.
அந்நியத்துணி புறக்கணிப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்த வேளையில், "அந்நியத் துணிகளை உங்கள் ஆலைகளில் எரியூட்டலாமா?" எனக்கேட்ட காந்திஜியிடம், உமர் சுப்ஹானி அளித்த பதில் இதுதான்: "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படவாப் போகிறது" என்பதாகும். அந்நியத்துணிகளை புறக்கணிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.

மது வியாபாரத்தின் மூலம், அதன் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலேய அரசுக்கும் வரிகள் மூலம் ஏராளமான தொகை போய் சேர்ந்தது. இதனைத் தடுக்கும் நோக்கில் மது ஒழிப்பு பிரச்சாரத்துடன் வெளிநாட்டு மதுபானக்கடைகள், கள்ளுக்கடைகள் மறியல் போராட்டம் நடத்துவோம் என காந்திஜி உத்தரவிட்டார். அதனை செயல்படுத்திய ஹாஜி முஹம்மது மெளலானா சாஹிப் உள்ளிட்ட பலரும் சிறைச் சென்றனர்.

நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தின் துவக்கமாக 1930 ஆம் ஆண்டு மே ஆறாம் நாள் காந்திஜி கைதுச் செய்யப்படுகிறார்.அதனைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவ்வாறு இந்தியாவில் சுதந்திரத்திற்காக காந்திஜி நடத்திய அகிம்சை போராட்டங்களுக்கு பெரும் ஆதரவை அளித்தவர்கள் முஸ்லிம்கள். அதனால்தான், காந்தி ஒருமுறை கூறினார், இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவை என்று. ஆம், அமைதியான தேசமாக இந்தியா உருவாக வேண்டும் என்பதுதான் காந்தியின் நோக்கம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் விஷ விருட்சமாக வளர்ந்த ஹிந்துத்துவா பாசிசம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவின் தேசத் தந்தையான காந்திஜியை சுட்டு வீழ்த்தியது. சாகும்பொழுது ‘ஹே ராம்! ஹே ராம்! என அவர் முனகியதாக கதைக் கட்டியது ஒரு கூட்டம். பின்னர் இது பொய் என நிரூபணமானது.

காந்தியை சுட்டுவீழ்த்திய கூட்டம்தான் பாப்ரி மஸ்ஜிதையும் தகர்த் தெறிந்தது. இந்தியாவில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுபான்மை இனத்தவரின் உயிர், உடைமைகளை கலவரங்களின் மூலம் பறித்ததும் இக்கூட்டம்தான். காந்தி கொலையில் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்ற வீரசாவர்க்கரின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் காந்தியின் படம் இடம் பெற்றிருக்கும் இடத்தில் வைத்து அவமானப்படுத்தியது பாசிச கும்பல். காந்தியை நினைவுக்கூறும் வேளைகளில் பாசிச கும்பலின் சதி வேலைகளையும் நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஏனெனில் காந்தி விரும்பியது ஹிந்து ராஷ்ட்ரம் அல்ல! அமைதியான இந்தியாவை

அயோத்தி தீர்ப்பு சரியானதே – இந்து அடிப்படைவாதக் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ்

இந்து அடிப்படைவாதக் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அயோத்தி தீர்ப்பு சரியானதே என்று கூறுகிறது.

இஸ்லாமியர்களை இந்தியாவின் இரண்டாம் தரப் பிஜைகளாகப் புறக்கணிக்கும் இத் தீர்ப்பு உலகம் முழுவதும் வாழும் ஜனநாயக முற்போகு சக்திகளின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அயோத்தி நில வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் சிறந்தது, சரியானது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ள திக்விஜய் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அ‌ளி‌த்த பேட்டி‌யி‌ல், இப்போதுள்ள சூழ்நிலையில் அயோத்தி நில வழக்கில் இதைவிட சிறந்த தீர்ப்பைக் கூறி விட முடியாது.

இந்துக்கள், முஸ்லிம்களுக்கு அந்த நிலத்தில் உள்ள உரிமையை தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது. தீர்ப்பு மூலம் வழக்குத் தொடர்ந்த அனைவருக்கும் வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது-தில்லி இமாம் புகாரி உறுதி!

புதுதில்லி,அக்.7: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதி கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று தில்லி ஜாமா மஸ்ஜித் தலைமை இமாம் மெüலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார்.
தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் தில்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

"அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மசூதிக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மசூதி பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது.இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது.இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைக்கு தில்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்' என்றார் சையத் அகமது புகாரி.

நன்றி;தினமணி

8.10.10

என்னைக் கொல்ல மொஸாத் திட்டம் - துபை காவல்துறை ஆணையர்

இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாதிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக துபையின் காவல்துறை தலைவர் தாஹி கல்ஃபான் தெரிவித்துள்ளார். ஜனவரி 20, 2010 அன்று ஹமாஸ்

அமைப்பைச் சார்ந்த மஹ்முத் அல் மபுஹின் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மொஸாத் இருப்பதாக தாஹி கல்ஃபான் தெரிவித்திருந்தார். இதுவரை தனக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உங்களது நாக்கை தேவையில்லாமல் பயன்படுத்தினால் உயிரை இழக்க நேரிடும் என ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஆய்வாளர்கள் இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிந்ததாக கல்ஃபான் தெரிவித்தார். இரண்டாவதாக கல்ஃபானின் உறவினரை தொடர்பு கொண்ட ஒருவர் கல்ஃபானை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். பின்னர் அவ்வாறு அந்த உறவினரை மிரட்டியவர் மொஸாதின் உளவாளி என்பது தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி 2010 ல் கல்ஃபான் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 11 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டார். ஒரு மேற்கத்தேய நாடு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த சந்தேக நபர்களில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த கல்ஃபான் அந்த நபரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்தக் கொலையில் 12 இங்கிலாந்துக்காரர்கள், 6 அயர்லாந்தவர், 4 பிரான்ஸ் நாட்டவர், 3 ஆஸ்திரேலியர் மற்றும் ஒரு ஜெர்மனியர் சம்பந்தப்பட்டிருப்பதாக துபை காவல்துறை சந்தேகிக்கிறது. இவர்கள் அனைவரும் அந்தந்த நாட்டின் போலி பாஸ்போர்ட்களை வைத்து துபை வந்திருக்கின்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நாடு தங்கள் நாட்டிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்திடம் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலைக்கும் மொஸாதுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

ஹஜ் யாத்ரிகர்களுக்கு வசதியாக மக்காவில் மெட்ரோ ரெயில்!

மக்கா: முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதக்கடமையின் போது யாத்ரீகர் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனித இடங்களுடன் மக்காவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றுள்ளது. 30 தினங்களுக்கு இந்த ரயில்களின் வெள்ளோட்டம் விரைவில் விடப்படவுள்ளன. ஹஜ் யாத்ரிகர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


முன்னதாக, சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இளவரசர் மன்சூர் பின் மித்அபு இதனை ஆய்வு செய்ய உள்ளார்.

அமைச்சக வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில் "6.5 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மக்கா மெட்ரோ திட்டம், யாத்ரிகர்களுக்கான திட்டங்களிலேயே இரண்டாவது பெரிய திட்டமாகும். இதன்மூலம் ஒரு மணி நேரத்திற்கு 72,000 யாத்ரிகர்கள் பயணித்துப் பயனடையலாம். புனிதக்கிரியைத் தலங்களான மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகியவற்றில் தலா மூன்று நிலையங்கள் என்கிற கணக்கில் 9 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, சுமார் 300 மீட்டர் நீளமுள்ள 10 தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை துணை அமைச்சர் ஹபீப் ஜெயினுல் ஆபிதின் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு வண்டியும் 3000 பயணிகளுக்கு இடமளிக்கும்" என்றார் அவர். இந்த ரயில் திட்டமானது அரஃபா - முஸ்தலிஃபா மற்றும் முஸ்தலிஃபா - மினா இடையேயான பயண கால அளவையும், மக்கா நகரின் போக்குவரத்து நெரிசலையும் வெகுவாக குறைத்துவிடும்.

மேலும் அவர் தெரிவிக்கையில் "இரண்டாம் கட்டத்தில், தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும். மக்கா புனித ஆலயத்திற்கான நிலையம் உம்முல்குரா சாலையில் அமைக்கப்படும். இந்த அல்மஷாயிர் ரெயில்வேயானது படிப்படியாக மதீனா, ஜெத்தா நகரங்களையும் இணைத்துச் செயற்படும் வகையில் அல்-ஹரமைன் ரெயில்வேயுடன் இணைக்கப்படும்"என்று கூறினார்.

வருடம் முழுதும் இந்த ரெயில்கள் இயக்கப்படும். 80-120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரெயில்களில் 20விழுக்காடு அமர்ந்து பயணிக்கவும், 80 விழுக்காட்டினர் நின்று பயணிக்கவுமாக அமைக்கப்பட்டுள்ளனவாம். வரும் வியாழனன்று இதற்கான வெள்ளோட்டம் தொடங்கப்படுகிறது.

இங்கிலாந்து தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

எமன் தலைநகரம் சனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மீது இன்று தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்னொரு தாக்குதலில் ஒரு பிரான்ஸ் ஊழியர் கொல்லப்பட்டுள்ளார். இந்த ராக்கெட் தூதரகத்திலுள்ள வாகனத்தின் மீது விழுந்ததாகவும் அதிலிருந்த ஒரு இங்கிலாந்து நாட்டவர் காயமடைந்திருப்பதாகவும் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலேஹ் இந்தத் தாக்குதல் சம்பந்தமாக இங்கிலாந்து தூதரிடம் நேரில் சந்தித்து உரையாடினார்.
மற்றொரு சம்பவத்தில் OMV என்ற எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒரு பாதுகாவலர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களைச் சுட்டதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பிரான்ஸ் நாட்டவர் கொல்லப்பட்டார். அரசு பாதுகாப்பு படையினர் உடனே துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்தனர். அல்காய்தாவுக்கும் எமன் அரசு படையினருக்குமிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து கொண்டிருந்தாலும் அல் காய்தா பெரும்பாலும் எமனில் உள்ள மேற்கத்திய நாட்டினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்

கடந்த ஏப்ரலில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இங்கிலாந்து தூதரைக் குறி வைத்து நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். இங்கிலாந்து தூதர் அரேபியா தீபகற்பத்தில் முஸ்லிம்களுக்கெதிரான போரை நடத்துவதில் முன் நிற்பதால் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக அல் காய்தா அப்போது தெரிவித்திருந்தது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்

7.10.10

வரலாற்றை நிராகரிக்கும் தீர்ப்பு

கட்டுரையாளர்:பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும். தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.நன்றி:தி ஹிந்து, தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத் தூது

6.10.10

வெளுத்தது ரஜினியின் காவி முகம் திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?


பால் தாக்கரேவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த பின் பேசிய ரஜினி காந்த் அவர் எனக்கு கடவுள் போன்றவர் என்று தெரிவித்தார்.
மும்பையில் தன் சக நண்பர்களான பாலிவுட் நடிகர்கள் பார்ப்பதற்காக எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார் ரஜினி. நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சிக்காக மும்பை சென்ற ரஜினி காந்த் இன்று சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பின் இது குறித்து தெரிவித்த ரஜினி காந்த்,'' சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என்று தெரிவித்தார்

5.10.10

ராமர் பிறந்த இடம் அயோத்தி என தீர்ப்பளித்த நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா: ராமஜென்மபூமி அறக்கட்டளை முடிவு

அயோத்தி,அக்.5:அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமஜென்மபூமி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக மூன்று தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையும் ஒன்றாகும். அறக்கட்டளையின் சாதுக்களும், சன்யாசிகளும் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்தார்.

ராமஜென்ம பூமி வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதைப் பாராட்டும் வகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் வேதாந்தி தெரிவித்தார். இது தொடர்பாக நீதிபதி சர்மாவுடன் பேசி, பாராட்டு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படும் என்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இவருக்கு முதலில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு நீதிபதிகளான எஸ்.யு. கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்று வேதாந்தி தெரிவித்தார்.

'நான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறது அயோத்தியா தீர்ப்பு' - எல்.கே.அத்வானி

புதுடெல்லி,அக்.5:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துவதாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்நீதிமன்ற உத்தரவின் பின்னணியில் தற்காலிக கோயில் அமைந்துள்ள இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தான் நடத்தப்போவதாக அத்வானி தெரிவிக்கிறார்.

1989 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயிலை கட்டவேண்டுமெனக் கோரி அத்வானி ரதயாத்திரையை நடத்தினார்.

அத்வானியின் ரத யாத்திரை நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி ரத்தயாத்திரையாக மாறியது.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பு சட்டங்களைவிட நம்பிக்கையை உயர்த்திப்பிடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார் அத்வானி. தீர்ப்பின் மூலம் சட்டம் நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பதாக அத்வானி கூறினார்.

ஃபைஸாபாத்தில் சரயூ நதியின் கரையில் காம்ப்ளக்ஸிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டலாம் என பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்காரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருந்தார். இதனை அத்வானியும் ஆதரித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்


4.10.10

பாபரி மஸ்ஜித் தொடர்பாக வழக்கு தொடுத்தவர் அதிர்ச்சியில் மரணம்


அஸ்லம் புரே தனது வழக்குறைஞர் ஒ.பி. சர்மாவுடன்



பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்லம் புரே அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்டோபர் 2 அன்று காலை மரணமடைந்தார்.
டெல்லியைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா விற்பனையாளர் அஸ்லம் புரே. 1991ல் உ.பி. மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை சுற்றி 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இந்த நிலப்பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட மனுவை அது நவம்பர் 1991ல் ஏற்றுக் கொண்டு உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதே போல் மத்திய அரசு கையகப்படுத்திய நிலப் பகுதியில் மீண்டும் கரசேவை செய்ய வி.ஹெச்.பி. 2002ல் முயற்சித்தப் போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் முன்பும் இவர் பிரமாண வாக்குமூலம் சமர்பித்துள்ளார். அடல்பிகாரி வாஜ்பேயியை லிபரான் ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் இவர் மனு செய்திருந்தார்.


பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டவுடன் அஸ்லம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானர். இவர் அது குறித்து யாரிடமும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போனார். இவரது மகன் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோத்தி தீர்ப்பு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நான் எப்படி இனி முஸ்லிம் சமூகத்தை சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்நதார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாரியாகஞ்சில் உள்ள அவரது வீட்டிலேயே மரணம் அடைந்தார். டெல்லி கேட் அருகே உள்ள அடக்கவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

அபத்தங்கள் நிறைந்த அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை: பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப்

புதுடெல்லி,அக்.4:ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் கூறிய ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என்ற இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை அபத்தங்கள் நிறைந்தது என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.

மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சிதிலங்களின் கற்களில் விஸ்வஹிந்து பரிசத்தால் கண்டெடுக்கப்பட்டது எனக்கூறப்படும் பழங்கால கல்வெட்டுகள் திட்டமிட்டே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பித்தது.

ராம்சாபுத்ரா எனக்கூறப்படும் இடத்திற்கு கீழ் செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் பாபரால் தகர்க்கப்பட்ட ராமர்கோயில் என்ற கண்ணை மூடிக்கொண்ட முடிவுக்கு வந்துள்ளது நீதிமன்றம்.

ஆனால், செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்த கட்டிடக்கலை மொகாலாயர்களின் வருகையின் மூலமே இந்தியாவிற்கு வந்தது என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பழங்கால ஹிந்துக் கோயில்கள் இம்மாதிரியான கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்படவில்லை. ஏறத்தாழ சம அளவிலான கட்டிகளை பயன்படுத்தி இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டாலும், அதன் சுவர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுக் குறித்து அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. ஆனாலும், அது ஒரு முக்கிய கட்டிடம் என அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது.

கட்டிடத்திற்கு கலைநயம் மிகுந்ததாக அஸ்திவாரம் இருந்ததாக கூறும் அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் அந்த கலை நயம் எத்தகையது என்பதுக் குறித்து கூறவில்லை. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?

புது தில்லி : அயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.

புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.

சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர் - முலாயம் சிங்

லக்னோ,அக்.2:பாப்ரி மஸ்ஜிதின் உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கருதுவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், உ.பி.மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதில் நான் அவநம்பிக்கைக் கொள்கிறேன். தேசம் மற்றும் நீதித்துறையின் எதிர்காலத்திற்கு இது உகந்தது அல்ல." என முலாயம் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

"அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும். தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு நிராசையும், ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வும் மேலோங்கியுள்ளது.

முஸ்லிம்கள் தற்பொழுது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்படும் என நான் எதிர்பார்க்கிறேன்.

1990 ஆம் ஆண்டில் அயோத்தியில் தாக்குதல் நடத்த முன்னேற்பாடுகள் நடக்கின்றன என நான் எச்சரித்திருந்தேன். சென்னையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலும் இதனைக் குறித்து தெரிவித்தேன்." இவ்வாறு முலாயாம் தெரிவித்தார்.

முலாயாம்சிங் யாதவின் அறிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், மாயாவதியும் களமிறங்கியுள்ளனர். மாநிலத்தின் அமைதி சூழலை தகர்ப்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங்கின் பெயர் குறிப்பிடாமல் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு தனி மனிதர்களின் அறிக்கையின் மூலம் கொந்தளிப்பிற்கு உள்ளாகக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடவேண்டாம் என உ.பி காங்கிரஸ் கட்சி முலாயம் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீர்ப்பைக் குறித்து உச்சநீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமெனவும், தீர்ப்பில் பா.ஜ.கவிற்கும், முலயாம்சிங்கிற்கும் சாதகமான நிலையில்லாததால் இரு பிரிவினருக்கு இத்தீர்ப்பு நிராசையை ஏற்படுத்தியுள்ளதாக உ.பி. மாநில சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன்

சென்னை: அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.

இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.

ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1.10.10

அயோத்தியில் பாபர் மசூதி இடம் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

லக்னோ : "அயோத்தியில் பாபர் மசூதிஇடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும், நேற்று லக்னோவை நோக்கியே இருந்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் 20க்கும் மேற்பட்டோர், கோர்ட்டிலிருந்து வெளியே வந்து லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் பேட்டியளித்தனர். பரபரப்பும், பதட்டமாக இருந்த சூழ்நிலையில் வக்கீல்கள் தாங்கள் எடுத்துரைத்த வாதங்களை விளக்கி, அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை கூறும்போதே, தீர்ப்பின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.


இந்த தீர்ப்பில் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.


நீதிபதிகளின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் சன்னி வக்பு போர்டும், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன. நாடு முழுவதும் அமைதி காக்க பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் அமைதி வாழ்க்கைக்கு உதவ ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளன.


20 பிரச்னைகளை அலசி ஆராய்ந்த ஐகோர்ட்


1. இடிக்கப்பட்ட கட்டடம், முஸ்லிம் அமைப்பு தெரிவித்தது போல மசூதியா?
2. அப்படியெனில், அது எப்போது, யாரால் கட்டப்பட்டது? முகலாய பேரரசர் பாபர் கட்டினாரா அல்லது அவரின் கவர்னர் மிர் பாகி தாஷ்கண்டி கட்டினாரா?
3. இந்துக் கோவில் இடிக்கப்பட்டு அதன் மீதுதான் மசூதி கட்டப்பட்டதா?
4. காலம் காலமாக பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினரா?
5. அவர்கள் பகிரங்கமாக இந்த சொத்தை கையகப்படுத்தினரா மற்றும் மசூதி கட்டப்பட்டதாக கூறப்படும் 1528ம் ஆண்டு முதல் அதைத் தொடர்ந்து வைத்திருந்தனரா?
6. கைவிடப்பட்டதாக கருதப்படும் காலமான 1949ம் ஆண்டு வரை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனரா?
7. இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதா?
8. தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அந்த இடத்தில் வழிபாடு நடத்தும் உரிமையை இந்துக்கள் பெற்றனரா?
9. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமா?
10. நினைவிற்கு எட்டாத காலம் முதல், ராமரின் பிறந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தினரா?
11. 1949ம் ஆண்டு டிசம்பர் 22 - 23ம் தேதியன்று இரவுதான் ராமர் சிலையும், மற்ற வழிபாட்டுப் பொருட்களும் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்டனவா அல்லது அதற்கு முன்னரே அவை இருந்தனவா?
12. சர்ச்சைக்குரிய இடத்தின் அருகில் இருந்த ராம்சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் போன்றவை பிரதான கட்டடத்துடன் சேர்ந்து இடிக்கப்பட்டனவா?
13. சர்ச்சைக்குரிய இடத்தின் கிழக்கிலும், வடக்கிலும், தெற்கிலும் உள்ள பகுதி அடக்க ஸ்தலம் மற்றும் மசூதியாக இருந்ததா?
14. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி கட்டடங்கள் இருந்ததா? மற்றும் இந்து வழிபாட்டுத் தலம் தவிர வேறு வழியாக அந்த இடத்திற்கு செல்ல முடியாதா?
15. இஸ்லாமிய கோட்பாடுகளின்படி, சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஒரு மசூதி வர முடியுமா?
16. மினரட் (மசூதியைச் சுற்றி இருக்கும் உயரமான கட்டடம்) இல்லாத ஒரு கட்டடம் மசூதியாக முடியுமா?
17. மூன்று பக்கங்களிலும் அடக்க ஸ்தலம் இருக்கும் போது, அங்கு மசூதி இருக்க முடியுமா?
18. இடித்த பின், அதை ஒரு மசூதி என அழைக்க முடியுமா?
19. பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், திறந்தவெளி இடத்தை தொழுகை நடத்துவதற்கான மசூதியாக முஸ்லிம்கள் பயன்படுத்த முடியுமா?
20. எந்த வகையான நிவாரணம் முஸ்லிம்களுக்கு உகந்தது?


நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்ன? அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு.கான் அளித்த தீர்ப்பின் சாராம்சம்:


* சர்ச்சைக்குரிய இடத்தில் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதி கட்டப்பட்டுள்ளது.
* மசூதி இருந்த இடம் உட்பட சர்ச்சைக்குரிய இடம் பாபாருக்குரியதா அல்லது மசூதியை கட்டியவருக்கு உரியதா என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
* மசூதி கட்டுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாக, அந்த இடத்தில் இடிந்து போன கோவிலின் சிதிலங்கள் கிடந்துள்ளன. அதன் மீது பாபர் உத்தரவுப்படி மசூதி கட்டப்பட்டுள்ளது. சிதிலமான பொருட்களும் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
* சர்ச்சைக்குரிய இடத்தில் சிறிய பகுதியில்தான் ராமர் பிறந்த இடம் என நம்பி வந்துள்ளனர். வழிபாடு நடந்தது ஒருபகுதி என்றால், அதற்கடுத்த பகுதியில் தொழுகையும் நடந்திருக்கிறது.
* ராமரும், சீதாவும், இங்கு வந்து தங்கியிருந்ததாக நம்பிக்கை கொண்டிருந்த இந்துக்கள் 1855 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வழிபட்டு வந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, மசூதியின் உட்புறத்திலும், காம்பவுண்ட் சுவருக்கு உட்பட பகுதியிலும் வழிபாட்டுத்தலங்களும், சிலைகளும் இருந்ததும், அதையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்களும் வழிபட்டு வந்துள்ளனர். இது புதுமையாகவும், இதற்குமுன் நடந்திராதவகையிலும் உள்ளது.
* மேற்கூறிய அம்சத்தின்படி பார்த்தால், இந்துக்களும், முஸ்லிம்களும் சர்ச்சைக்குரிய இடத்தின் கூட்டு உரிமையாளர்களாக இருந்துவந்தது தெரியவந்துள்ளது.
* ஓட்டு மொத்த கூட்டு உரிமை உள்ள போதிலும், தங்கள் வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்டுவந்துள்ளனர். முறையான பாகப்பிரிவினை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
* கடந்த 1949 ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மசூதியின் மைய பகுதியின் கீழ் தான், ராமர் பிறந்த இடமாக கருதி ராமர் சிலையை வைத்து வழிபட துவங்கியுள்ளனர். ஆனால், அதற்கு முன் பல ஆண்டுகளாக அந்த இடத்தைதான் ராமர் பிறந்த இடமாக வழிபட்டு வந்துள்ளனர்.
* மேற்கூறிய அம்சங்களை தீர அலசி ஆராய்ந்து பார்த்ததில், சர்ச்சைக்குரிய இடம் இரு தரப்பினருக்கும் பாத்தியப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
* மசூதியின் மைய பகுதியின் கீழ், ராமர் சிலை இருந்த இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
* ராமரும், சீதாவும் தங்கியிருந்த கருதப்படும் பகுதியை, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு ஒதுக்க வேண்டும்
* மூன்று தரப்பினருக்கும் இடங்களை பிரித்து அளிக்கும் போது, சிறு சிறு மாற்றங்கள் தேவைப்படும் பட்சத்தில், அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மத்திய அரசால் கையகப்படுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து சில பகுதிகளை ஒதுக்க வேண்டும்.
* மூன்று மாதங்கள் வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பகிர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் கருத்துக்களை அளிக்கலாம். இவ்வாறு எஸ்.யு.கான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


நீதிபதி அகர்வால் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:


* சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதியின் மைய பகுதியின் கீழ் தான், இந்துக்களின் மத நம்பிக்கைப்படி ராமர் பிறந்த இடமாக வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.
* சர்ச்சைக்குரிய இடத்தில் எப்போதும் மசூதி இருந்ததாக கருதப்பட்டு, முஸ்லிம்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இருப்பினும் மசூதி 1528ம் ஆண்டு பாபரால்தான் கட்டப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் சேர்க்கப்படவில்லை.
* மசூதியின் மையப் பகுதியின் கீழ்தான், 1949ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
* மசூதி கட்டப்பட்ட பகுதியில் தான் இந்துக்களுக்குரிய சமய கட்டடம் இருந்துள்ளது. அதை தகர்த்துவிட்டு தான் மசூதி எழுப்பப்பட்டுள்ளது.


நீதிபதி சர்மா அளித்த தீர்ப்பில், "ராமர் பிறந்த ஜென்மஸ்தானம் அது. அது கடவுள் ராமர் பிறந்த இடம். ராமர், குழந்தையாக இருந்ததாகக் கருதக்கூடிய இடம். அப்படிப்பட்ட கடவுள் உருவமோ அல்லது உருவமின்றியோ எல்லா இடங்களிலும் நீக்கமற இருப்பவர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைகுரிய இடத்தில் யாருக்கு முக்கிய உரிமையுள்ளது என்பது தொடர்பாக, சன்னி மத்திய வக்பு வாரியம், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவை தொடர்ந்த மனுக்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.


தீர்ப்பைக் கேட்பதில் குழப்பமோ, குழப்பம்: தீர்ப்பு விவரத்தை தெரிந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர்கள் உட்பட மீடியா பிரதிநிதிகள் ஐகோர்ட்டிற்கு வரவேண்டாம். இதற்காக சிறப்பு ஏற்பாடு லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டால் நியமிக்கப்படும் பிரதிநிதி அறிவிப்பார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது நடந்த வாதபிரதிவாதங்களை விளக்குவதற்காக, ஆஜரான வக்கீல்கள், கலெக்டர் அலுவலக மீடியா சென்டருக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் 4 மணி முதல், நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் லக்னோவில் உள்ள மீடியா சென்டரை நோக்கி இருந்தது. 4.35 மணிக்கு, வக்கீல்கள் கூட்டமாக வந்தனர். சிலர், வெற்றிச் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் இரண்டு விரல்களை காட்டியபடி வந்தனர். தீர்ப்பு வெளியாகிவிட்டதோ என்று பத்திரிகையாளர்கள் குழம்பிப் போயினர். இருபதுக்கும் மேற்பட்ட வக்கீல்கள், வழக்கு விசாரணையின் போது தாங்கள் எடுத்துவைத்த வாதங்களை வாசித்தனர். ஆளாளுக்கு பலரும் பேசியதால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஒரே நேரத்தில் பலரும் பேசி குழப்பினர். தீர்ப்பு தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் 600 பத்திரிகையாளர்கள், லக்னோவில் குழுமியிருந்தனர். நேரடியாக ஒளிபரப்புவதற்காக 40க்கும் மேற்பட்ட வெளிப்புற படப்பிடிப்பு (ஓ.பி.,) வேன்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.


கடைசி நாளில் நீதிபதி வழங்கிய பெரும் தீர்ப்பு: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மாவின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. நீதிபதியாக பணியாற்றிய கடைசி நாளான நேற்று அவர் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்.


அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கில் நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த மூன்று நீதிபதிகளில் தரம் வீர் சர்மா, லக்னோ பெஞ்சில் மூத்த நீதிபதி. இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இவர் தனது உணவை தானே சமைத்துக் கொள்வார். அவ்வப்போது தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகளுக்கும் உணவு சமைத்துக் கொண்டு வந்து வழங்குவார். இவர் ஒரு நல்ல சமையல்காரர். நீதிபதி சர்மா, பெரும்பாலான நேரங்களில் இந்திதான் பேசுவார். சைவ உணவு மட்டுமே சாப்பிடும் இவர், ஒரு பிரம்மச்சாரி. சமூக விழாக்களில் பங்கேற்கும் போது, எப்போதும் வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்துதான் வருவார். கோர்ட்டுகளில் வழக்கு தொடரும் ஏழைகளுக்கும் இவர் பல வகையில் உதவி வருகிறார். கொடையுள்ளம் கொண்ட இவர், நெருக்கடியான பல காலகட்டங்களில் உதவியுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்த இவர், 1967ல் பட்டப்படிப்பை முடித்தார். 1970ல் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1972ல் நீதித்துறை பணியில் சேர்ந்தார். 2002ல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியானார். 2005ல் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதியானார். அயோத்தி வழக்கின் நீதிபதியாக 2007ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நியமிக்கப்பட்டார்.


தீர்ப்பு வழங்கிய மற்ற இரண்டு நீதிபதிகளில் ஒருவர் அகர்வால் (வயது 52). லக்னோ பெஞ்சில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் மிகவும் இளையவர் இவரே. நீதிபதி சர்மா போல அல்லாமல், இவர் பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார். கோர்ட்டிற்கு வெளியே கூட அப்படித்தான். அறிவுக் கூர்மையாகவும், சுருக்கமாகவும் தீர்ப்புகளை வழங்குவதில் கைதேர்ந்தவர். எப்போதும் தெளிவாகப் பேசக்கூடியவர். சிவில் சட்டங்களில் கைதேர்ந்தவர். கடந்த 1977ல் ஆக்ரா பல்கலையில் அறிவியலில் பட்டம் பெற்ற அகர்வால், மீரட் பல்கலையில் சட்டம் பயின்றார். 1980ல் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். அதே ஆண்டு அக்டோபரில் அலகாபாத் ஐகோர்ட் பார் அசோசியேஷனில் சேர்ந்தார். ஆரம்பத்தில் வரிகள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த அகர்வால், பின்னர் சேவைத் துறை தொடர்பான வழக்குகளில் ஆஜரானார். 2005 அக்டோபரில் அலகாபாத் ஐகோர்ட் பெஞ்சில் சேர்ந்தார். 2007 ஆகஸ்டில் நிரந்தர நீதிபதியானார். கடந்த 1958 ஏப்ரல் 25ம் தேதி பிறந்த அகர்வாலின் நீதிபதி பதவிக்காலம், 2020 ஏப்ரல் 23ம் தேதி முடிவடைகிறது.


மூன்றாவது நீதிபதியான சிப்காட் உல்லா கான், 1952 ஜனவரி 31ம் தேதி பிறந்தவர். 1975ல் சட்டப்படிப்பை முடித்த இவர், அதே ஆண்டில் வக்கீலாக பணியாற்றத் துவங்கினார். சிவில், வருவாய், சேவை சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகி வந்தார். 2002ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் தன்மை கொண்ட இவர், சிவில் வழக்குகளில் வழக்கு தொடுத்தவர்களை கோர்ட்டுகளுக்கு வெளியே பேசித் தீர்க்கும்படி அடிக்கடி கேட்டுக் கொள்வார். அவரின் யோசனையின் பேரில், 2000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமாக முடிந்துள்ளன. அயோத்தி வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக 2010 ஜனவரி 11ம் தேதி நியமிக்கப்பட்ட இவர், எப்போதும் தனது அணுகுமுறையில் உறுதியாக இருப்பவர். கடுமையான நபர் என, மற்றவர்களால் விமர்சிக்கப்படுவார். இவரின் பதவிக்காலம் 2014 ஜனவரி 30ம் தேதி முடிவடைகிறது. இவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், அகில இந்திய ரிப்போர்ட்டர் லா புக்கில் இடம் பெற்றுள்ளன.


தீர்ப்பு வெளியான நேரத்தில் எப்படி இருந்தது அயோத்தி: அயோத்தி நிலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உ.பி., மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று வழங்கியது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள், மதியம் 2.30 மணியில் இருந்தே தீர்ப்பை எதிர்நோக்கி, "டிவி' முன் அமர்ந்திருந்தனர். அதேநேரத்தில், பதட்டம் நிறைந்த பல மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாலைகளில் வன்முறையை தூண்டும் கோஷங்களை யாரும் எழுப்பாத வகையிலும், தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டங்கள் நடத்தாத வகையிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


தீர்ப்பை எதிர்நோக்கி மாநில அரசு பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், தீர்ப்பு எப்படி வருமோ என, மக்கள் யாரும் அஞ்சவில்லை. தீர்ப்பை எதிர்நோக்கியே நாள் முழுவதும் காத்திருந்தனர். பதட்டம் நிறைந்த பல மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் குறைவான நபர்களே வேலைக்கு வந்திருந்தனர். பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அயோத்தி மற்றும் பைசாபாத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மார்க்கெட்டுகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. எந்தவிதமான வன்முறை நிகழ்ந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், போலீசார் அனைத்து விதமான உபகரணங்களுடனும் தயார் நிலையில் இருந்தனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் வாசிகளே. பல மாவட்டங்களில் பள்ளிகளை நிர்வாகத்தினர் திறக்கவில்லை. திறந்திருந்த சில பள்ளிகளும் முன்னதாகவே மூடப்பட்டன.


வன்முறைக்கு பெயர் போன மீரட்டில் மதியம் 2.30 மணிக்கெல்லாம் சந்தைகள் மூடப்பட்டன. தீர்ப்பை "டிவி'யில் பார்க்கவும், பாதுகாப்பு காரணங்கள் கருதியும் கடைக்காரர்கள் கடைகளை மூடினர். இதேபோல், காசியாபாத், முசாபர் நகர், ராம்பூர், கோரக்பூர், கான்பூர், பரேலி, சகாரன்பூர், மொராதாபாத் போன்ற இடங்களிலும் முன்னதாகவே சந்தைகள் மூடப்பட்டன. மாநிலத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் எல்லாம் கடந்த மூன்று நாட்களாக பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். எந்தவிதமான வன்முறைகளும் நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு சமூக அமைப்புகளும், கல்வியாளர்களும், அறிஞர்களும் ஈடுபட்டிருந்தனர்.


தீர்ப்பை வெளியிடுவதற்காக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் சார்பில், சிறப்பு வெப்சைட் ஒன்றும் துவக்கப்பட்டிருந்தது. அந்த வெப்சைட்டில் மாலை 4 மணிக்கு பிறகு, தீர்ப்பு விவரத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தும், அந்த வெப்சைட் இணைப்பு எளிதில் கிடைக்கவில்லை. தீர்ப்பின் நகலை பெறும் வரை தீர்ப்பு இப்படித்தான் வரும் என, மீடியாக்கள் எந்த விதமான செய்திகளையும் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக உ.பி., போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இரண்டு லட்சம் போலீசார், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 72 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் அதிக பதட்டம் நிறைந்த மாவட்டங்களாகவும், 25 மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன. அத்துடன் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் தீர்ப்பு எப்படி வந்தாலும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.


"நிர்மோகி அகாரா': ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பாரம்பரியமான உரிமையை நிலைநாட்டும் வகையில், அங்கு தங்கி வழிபடும் சாமியார்களின் அமைப்பு தான் நிர்மோகி அகாரா. இங்குள்ள சாமியார்கள் அன்றாடம் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அயோத்தியில் உள்ள பழைமையான அமைப்பு இது. 1885ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று, இந்த அமைப்பு, பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1959ம் ஆண்டில் இந்த அமைப்பு, சர்ச்சைக்குரிய இடம் தங்களுடையது என்று கோரியது. நேற்றைய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்றில் ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு சொந்தம் என்ற தீர்ப்பால், இந்த அமைப்பின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.


ராம் லாலா: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1949ல் ராமர் சிலையை வைத்த அமைப்பு தான் ராம் லாலா விராஜ்மன். ராமர் பிறந்த இடத்தில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கூடாது என்ற தீர்ப்பால், அந்த சிலைகள் அமைந்துள்ள இடம், மசூதி குவிமாடம் இருந்த இடம் உட்பட மூன்றில் ஒரு பங்கு இடம் இந்த அமைப்புக்கு வழங்கி அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

லக்னோ : ""அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். எந்த வகையிலும் சரணடைந்து விட மாட்டோம்,'' என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது.


இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி கூறியதாவது: "அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம். "நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்' என, ஐகோர்ட் தெரிவித்த பார்முலாவை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நிலம் விஷயத்தில் சரணடைந்து விட மாட்டோம். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வந்தால், அதற்கும் சன்னி வக்பு வாரியம் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு யாராவது முன்மொழிந்தால், அது நடக்கும். அடுத்த 90 நாட்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்பதால், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சன்னி வக்பு வாரியத்திற்கு கால அவகாசம் உள்ளது.


அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டத்திற்குப் பின், அப்பீல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு செயல்பட மாட்டோம். மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை. பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தி அளிப்பதோடு மட்டுமின்றி, முஸ்லிம்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளது. தற்போதைய நிலையில் இதை மட்டுமே தெரிவிக்க முடியும். தீர்ப்பை முழுமையாக படித்த பின்னரே மற்ற விவரங்களை தெரிவிப்போம். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல முடியும் என்பதால், மக்கள் அதிருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை இழக்க எந்தக் காரணமும் இல்லை. தற்போதைய பிரச்னையை யாரும் வீதிக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். நாடு முழுவதும் அமைதி பேணிக்காக்கப்படும் என, நம்புகிறேன். இவ்வாறு ஜாபர்யாப் ஜிலானி கூறினார்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு-மறுக்கப்பட்ட நீதி

அறுபது ஆண்டுகள் கழித்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருந்த முஸ்லிம்களை இந்த தீர்ப்பு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது!

ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு சொந்தம் ? என தீர்ப்பு வழங்காமல் 'குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை' போல சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து வழங்கும் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு 'கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த' கதையாக உள்ளது!

'பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்'என்று சட்டம் வகுத்து விட்டு
நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை 'இங்கு தான் ராமர் பிறந்தார்' என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது!

நிலத்திற்கு உரிமை கோரும் சன்னி வக்ப் வாரியத்தின் மனு தள்ளபடி செய்யபட்டிருப்பதும்,
சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட சிலைகள் அங்கு நீடிக்கும் என்பதும் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுவர்.

முஸ்லிம்கள் இது போன்று நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரினால் இது போன்று நீதி மன்றங்களும் , அரசும் நடந்து கொள்ளுமா? ஏன் எனில் அனைத்து அரசு கட்டிடங்களும், நீதி மன்றங்களும் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை பிரதி பலித்து கொண்டு நிற்கின்றன.

இந்த நாட்டில் மக்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதி மன்றங்களை நம்பிக் கொண்டுள்ளனர்.அந்த நம்பிக்கை பொய்க்குமானால் அவர்கள் நீதியை வேறு வழிகளில் தேட நாடினால் விளைவு என்னாகும்?

எப்படி இருப்பினும் மூன்று மாதங்கள் தற்போதைய நிலை நீடிக்கும் என்பதும் உச்ச நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேல் முறையீடு செய்யும் என்பதும் தெரிகிறது! அது வரை அனைவரும் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லை.
நன்றி: செங்கிஸ்கான் ஆன்லைன்

கட்டப் பஞ்சாயத்து - இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது நன்றி:த.மு.மு.க.இணையதளம்

30.9.10

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

இப்படிக்கு

ரஹ்மதுல்லாஹ்

மாநிலத் துணைத் தலைவர் நன்றி:TNTJ இணையதளம்