தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.10

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு-மறுக்கப்பட்ட நீதி

அறுபது ஆண்டுகள் கழித்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருந்த முஸ்லிம்களை இந்த தீர்ப்பு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது!

ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு சொந்தம் ? என தீர்ப்பு வழங்காமல் 'குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை' போல சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து வழங்கும் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு 'கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த' கதையாக உள்ளது!

'பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்'என்று சட்டம் வகுத்து விட்டு
நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை 'இங்கு தான் ராமர் பிறந்தார்' என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது!

நிலத்திற்கு உரிமை கோரும் சன்னி வக்ப் வாரியத்தின் மனு தள்ளபடி செய்யபட்டிருப்பதும்,
சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட சிலைகள் அங்கு நீடிக்கும் என்பதும் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுவர்.

முஸ்லிம்கள் இது போன்று நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரினால் இது போன்று நீதி மன்றங்களும் , அரசும் நடந்து கொள்ளுமா? ஏன் எனில் அனைத்து அரசு கட்டிடங்களும், நீதி மன்றங்களும் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை பிரதி பலித்து கொண்டு நிற்கின்றன.

இந்த நாட்டில் மக்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதி மன்றங்களை நம்பிக் கொண்டுள்ளனர்.அந்த நம்பிக்கை பொய்க்குமானால் அவர்கள் நீதியை வேறு வழிகளில் தேட நாடினால் விளைவு என்னாகும்?

எப்படி இருப்பினும் மூன்று மாதங்கள் தற்போதைய நிலை நீடிக்கும் என்பதும் உச்ச நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேல் முறையீடு செய்யும் என்பதும் தெரிகிறது! அது வரை அனைவரும் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லை.
நன்றி: செங்கிஸ்கான் ஆன்லைன்

0 கருத்துகள்: