தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.11

தந்தையைக் கொன்ற பாகிஸ்தான் விமானியை மன்னித்த இந்திய விமானியின் மகள்

புதுடெல்லி, ஆக. 13-  1965-ம் ஆண்டு போரின்போது குஜராத் முதல்வர் சென்ற விமானத்தை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் விமானி 46 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டார். அவரை மன்னித்துவிட்டதாக அந்த விமானத்தை ஓட்டிய விமானியின் மகள் பரீதா சிங் தெரிவித்துள்ளார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருக்கையில் அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேத்தா, அவரது மனைவி சரோஜ்பென் மேத்தா, 3 அரசு அதிகாரிகள், விமானப் பணியாளர், குஜராத் சமாச்சார் நிருபர், ஏர் இந்தியா விமானி ஜகாங்கீர் என்ஜினியர் ஆகியோர் சென்ற விமானம்

12.8.11

குவைத்:வெளிநாட்டினர் போராட்டத்தில் பங்கேற்றால் சிறையும், அபராதமும்


Ku-map
குவைத்சிட்டி:குவைத்தில் ஏதேனும் பெயரில் நடைபெறும் போராட்டங்களில் குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் காத்திருப்பதாக குவைத் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா அரசு எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை கண்டித்து குவைத்தில் அதிகரித்துவரும் போராட்டங்களில் வெளிநாட்டினர் பங்கேற்பதாக வெளியான

துபாயில் ஸக்காத்துல் ஃபித்ர்(பெ​ருநாள் தர்மம்) 15 திர்ஹமாக நிர்ணயம்

துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் அறக்கொடை நிறுவனங்களின் இயக்குநரகமான இஸ்லாமிய விவகாரம் மற்றும் அறக்கொடை பணிகள் துறை இவ்வாண்டு ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் ரமலான் பெருநாள் தினத்திற்கு முந்தைய தர்மத்தின் தொகையை 15 திர்ஹமாக நிர்ணயித்துள்ளது.

ஸக்காத்துல் ஃபித்ர் என அழைக்கப்படும்

பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்


indexpic2
மும்பை:தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க பாலிக்ராஃப் டெஸ்ட்(பலமுனை வரைவி சோதனை), ப்ரெயின் மேப்பிங் உள்ளிட்ட உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விஞ்ஞான

அபினவ் பாரத்தில் சேர்ந்தது ரகசிய விபரங்களை சேகரிக்க – வழக்கிலிருந்து தப்ப முயலும் புரோகித்


purohit295
மும்பை:ராணுவ உளவுத்துறையின் ரகசிய ஆபரேசனின் ஒரு பகுதியாகவே தான் அபினவ் பாரத்திலும், சிமியிலும் ஊடுருவியதாக மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகாந்த் புரோகித் கூறியுள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையில் புரோகித்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எடுத்துவைத்த

புற்று நோயை குணப்படுத்தும் தங்கம்


புற்று நோயை தங்கம் குணப்படுத்தும் என தெரிய வந்துள்ளது. இதனால் அதற்கு மேலும் மவுசு அதிகரிக்கிறது.ஆபரணங்கள், மற்றும் சிலைகள் போன்றவை செய்ய தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இது புற்று நோயை குணப்படுத்தவும் உதவும் என தெரியவந்துள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம்

பொருளாதார முறைகேடு:எடியூரப்பாவின் மீது லோகாயுக்தா எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது

பெங்களூர்:பொருளாதார முறைகேடு தொடர்பாக முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது லோகாயுக்தா போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளது.

சட்டவிரோத சுரங்கத் தொழில், நிலபேர ஊழல் ஆகிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு இவ்வழக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அப்பர் பத்ரா நீர்பாசன திட்டம் தொடர்பாக பொருளாதார முறைகேட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் எடியூரப்பா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம்

11.8.11

லண்டன் கலவரம் - பிபிசிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய வீடியோ


உலகின் மிக பழமைவாய்ந்த, சர்வதேச செய்தி சேவைகளில் ஒன்றான பிபிசி, இங்கிலாந்தின்  அரசு சார்புநிலை ஊடகம் என்பது ஒரு விமர்சன கருத்து.
தற்போது லண்டனில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குரொய்டன் நகரில், எழுத்தாளரும், ஒளிபரப்பாளருமான டார்கஸ் ஹோவ் என்பவரை பிபிசி எதேர்ச்சையாக ஒரு பேட்டி கண்டது.

குஜராத் அரசின் சஸ்பென்சன் நடவடிக்கை எதிராக சஞ்சீவ் பட்


35774e04415a35c1e59971d59297aa25_full-270x170
அஹ்மதாபாத்:தன்னை சஸ்பெண்ட் செய்த குஜராத் அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார்.
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் அளித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சஞ்சீவ்

பிரிட்டனில் கலவரம் பரவுகிறது


riots-london_1967142c
லண்டன்:போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லண்டனில் உருவான கலவரம் நான்கு தினங்களை கடந்தவேளையில் பிரிட்டனின் இதர நகரங்களுக்கும் பரவியுள்ளது. கோபம் கொண்ட மக்கள் திரள் போலீஸ் வாகனங்களையும், கட்டிடங்களையும் தகர்த்து தீவைத்துக் கொள்ளுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்கிறது.
வடக்கு லண்டனில் நாட்டன்ஹாமில்

10.8.11

இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு

டமாஸ்கஸ்:அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காக பஸ்ஸாருல் ஆஸாதின் வெறிப்பிடித்த அரசு நடத்திவரும் படுகொலைகளுக்கு எதிராக அரபு நாடுகளும் வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளன.ஒருவார காலமாக ஹமாவிலும் வடகிழக்கு
நகரமான டையர் எஸ்ஸோரிலும் தொடரும் கூட்டுப்படுகொலைகளுக்கு

போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் – உச்சநீதிமன்றம் காட்டம்


supreme court
புதுடெல்லி:போலி என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் கொலை வழக்குகளில்

மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!


 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் சமர்ப்பித்த ஜாமீன் மனுவை மோகா(MCOCA) நீதிமன்றம் நிராகரித்தது!


2008 ஆம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் மனு கோரி வழக்கறிஞர்கள் மோகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

விரல் ரேகை இல்லாத மனிதர்கள் !!

வாஷிங்டன்: விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. 

மிக வேகமான இணைய உலாவி எது?


browser-7-13-lg2
Compuware’s  எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.
1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது.

ஜெ.வுக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்-10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த உத்தரவு


judge_gavel
டெல்லி:சமச்சீர் கல்வி திட்டத்தை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சௌகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட

9.8.11

ஈராக்:அமெரிக்காவிற்கு அல் ஸத்ர் எச்சரிக்கை

பாக்தாத்:ஏற்கனவே அறிவித்துள்ள கால வரம்பிற்கும் மேலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நீடித்தால் தாக்குவோம் என பிரபல ஷியா அறிஞர் முக்ததா அல்ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து வாபஸ் பெறுவோம் என அறிவித்துவிட்டு ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரால் சிலரை நிரந்தரமாக நாட்டில் தங்கவைப்பதற்கு திட்டமிடவே ஸத்ரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஆக்கிரமிப்பு சக்திகளை தங்களது ஆயுதம் எதிர்கொள்ளும் என ஸத்ரை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்


ஜனதா கட்சியின் தலைவரும், அரசியல் கோமாளியுமான சுப்ரமணிய சுவாமி மும்பையை மையமாக கொண்டு செயல்படும் டி.என்.எ ஆங்கில இதழில் முஸ்லிம்களை குறித்து மிக மோசமான கட்டுரையை எழுதி தனது ஹிந்துத்துவ வெறித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இக்கட்டுரை முஸ்லிம்கள் உள்பட மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும்

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது


malegaon
மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.

லண்டன் வீதிகளில் வன்முறைகள்


லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள