தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.12

வெள்ளத்தில் மிதக்கின்றது இங்கிலாந்து நகரங்கள். பயங்கர நிலச்சரிவால் இரயில்கள் ரத்து.

இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து பயங்கரமாக கனமழை பெய்து கொண்டு வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இரயில் பாதையில் விழுந்துள்ளதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏறத்தாழ் 400 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவைகளில் 91 இடங்கள் மிகவும் சீரியசானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. Wallington, Hampshire, போன்ற நகரங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வெள்ள மீட்பு படையினர் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.Towns underwater and landslides blocking railway lines as forecasters warn it's about to get worse

Towns underwater and landslides blocking railway lines as forecasters warn it's about to get worse
Towns underwater and landslides blocking railway lines as forecasters warn it's about to get worse

 Towns underwater and landslides blocking railway lines as forecasters warn it's about to get worse
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பயணிகள் மிகவும் திண்டாடி வருகின்றனர். காரின் முக்கால்வாசி பகுதி நீரால் சில இடங்களில் சூழப்படுவதால், ஓட்டுனர்கள், காரை இயக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
 Towns underwater and landslides blocking railway lines as forecasters warn it's about to get worse
இதற்கிடையே கடுமையான பனியின் காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மீட்புப்பணியின்போது, 91 வயது முதியவர் ஒருவரின் பிணத்தை மீட்டனர். அவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

0 கருத்துகள்: