தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.12

சென்னையில் காவல்நிலையம் முற்றுகை போராட்டம் முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி


பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நு ழைந்து சோதனை செய்த போலீசாரை கண்டித்து நேற்று 22.12.2012 போராட்டம் செய்த முஸ்லிம் அமைப்பினர் மீது போ லீசார் தடியடி நடத்தினர்.உலகம் அழியுமா?டிசம்பர் 21&ந் தேதி உலகம் அழியாது என்று துண்டு பிரசுரம் வெளியிட்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப் பின் சென்னை ஜாம்பஜார்
கிளை நிர்வாகிகள்ஒரு  அதில், ஒரு மதத்தை இழி வாக குறிப்பிட்டுள்ளதாக கூறி ஜாம்பஜார் போலீசில் விஷ்வ இந்து பரிஷத் ஹி ந்து முன்னனி அமைப்பை சேர்ந்தவர்கள் 20&ந் தேதி புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில்தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிர்வாகி யாகூப் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதுமட்டுமல்லாமல் இதற்கு சம்மந்தமே இல்லாத  தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாத் மயிலாப்பூர் கிளைத்தலைவர் அவர்களையும்
இந்த வழக்கில், யாகூப்பை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போதுபெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து சோதனை என்ற பெயரில் போலீசார் அராஜகமாக நடந்துக்கொண்டதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர்.போலீசார் நடத்திய தடியடி
நேற்று மதியம் 3 மணியளவில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிகுமார், துணை கமிஷனர்கள் கிரி, பவானீஸ்வரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் போலீசார் கைது செய்வதாக கூறினர். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் போராட்டக்காரர்களை ஏறும்படி போலீசார் கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் காட்டுத்தனமாக தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.                       துண்டு பிரசுரம்இதையடுத்து சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் பெண்களும், ஆண்களும் ஏராளமானோர் அங்கு வந்து குவியத் தொடங்கினர். அவர்களில் 500&க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் போலீசுக்கு எதிராக கோஷம் போட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த போராட்டத்தினால், மதியம் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை அண்ணாசாலை உட்பட திருவல்லிக்கேணி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யூசுப், நிருபரிடம் கூறியதாவது:&
டிசம்பர் 21&ந் தேதி உலகம் அழிந்துவிடும் என்று ஏற்பட்ட புரளியால் பொதுமக்கள் பலர் பயந்துக்கொண்டிருந்தனர். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வெளியிட்டனர்.
போலீசார் அத்துமீறல்
இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், யாகூப் என்பவரை கைது செய்துள்ளனர். ஆனால் இந்த துண்டு பிரசுரத்துக்கு தொடர்பே இல்லாத மைலாப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் நடு இரவில் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், உதவி கமிஷனர் செந்தில்முருகன் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளார். பிற மதத்தை புண்படுத்தும் விதமாக செயல்பட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நடு இரவில் தீவிரவாதிகளை பிடிப்பதுபோல் நுழைந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அமைதியான முறையில் யாருக்கும் எந்த இடையூறு இல்லாமல் இந்த போராட்டம் நடத்தியுள்ளோம்இதில் தடியடி பிரயோகம் செய்தது மிக வண்மையாக கண்டிக்கபடவேண்டியது இதற்கு காவல்துறை அதிகாரிகள் பதில்சொல்லியே ஆகவேண்டும் என்றார்

0 கருத்துகள்: