தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.12

இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரம் : நீதித்துறை கமிஷன் அமைக்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண்  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்ப ட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன் னெடுக்கவும்,பொதுவிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் யோசனைகளை முன் வைக்கவும் நீதித்துறை கமிஷன் ஒன்றை நியமிக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் பாலியல்

பலாத்காரத்திற்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது குறித்தும் இக் கமிஷன் ஆராயவிருக்கிறது. இன்று (சனிக்கிழமை) டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிர பவனை முற்றுகையிட்டு பெருமளவிலான இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். பொதுமக்கள் வீதியில் நிற்கிறார்கள், நேதாஜிகள் எங்கே மறைமுகமாக பதுங்கிவிட்டனரா? என கேள்வி எழுப்புகின்றனர் ஆர்ப்பாட்ட காரர்கள்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐந்து காவல்துறை அதிகாரிகளை தாம் வேலை நிறுத்தம் செய்துள்ளதாக  மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துளார்.  மேலும் பிரதமர் மன்மோகன் சிங்குடனான கலந்தாலோசனைக்கு பிறகே இந்நீதித்துறை கமிஷன் அமைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம் நடத்த வேண்டுமென நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் விடுத்திருந்த கோரிக்கையை, சுஷில்குமார் ஷிண்டே மறுத்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்னர் தான் சிறப்பு கூட்டமொன்று நடந்தது. எனவே தற்போது அது அவசியமில்லை என அவர்

0 கருத்துகள்: