தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.12

எகிப்திய உப அதிபர் பதவி விலகினார்


எகிப்தின் புதிய அரசியல் சாசனத்திற்கான சர்வ ஜன வாக்கெடுப்பின் இரண்டாவது கட்ட வாக்க ளிப்பு நேற்று சனி நடைபெற்றது.முதற்கட்ட வா க்களிப்பில் 57 வீதமானவர்கள் வாக்களித்துள்ளா ர்கள், நேற்று பெருந்தொகையானவர்கள் குறித்த நேரம் முடிவடைந்தும் வாக்களிக்க முடியாமல் போன காரணத்தால் நான்கு மணி நேரம் வாக்க ளிப்பு நீடிப்பு செய்யப்பட்டது.இந்தத் தேர்தலில் மொத்தம் 51 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகு தி பெற்றிருக்கிறார்கள்.இந்த வாக்களிப்பில் பிரே ணை
வெற்றி பெற்றாலும் கூட, இது அதிபரின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுப்ப தோடு, சிறுபான்மை மக்களின் சுதந்திரத்திற்கும் பாதகமாக அமையும் என்றே குறை கூறப்படுகிறது.
எகிப்து சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சியா – சன்னி முஸ்லீம் பிரிவு காரணமாக ஏறத்தாழ இரண்டாக பிளவுபட்டுக்கிடக்கிறது, அதை ஒட்டவைக்க இந்த யாப்பு எவ்வளவு தூரம் உதவப்போகிறது என்பது முக்கிய கேள்வியாகும்.
நிலமைகளின் பாரதூரத்தன்மையை விளங்கி, உப அதிபர் முகமுட் மேக்கி இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதிக்குலைவு காரணமாக முன்னரே பதவி விலக முடிவு செய்திருந்ததாகவும் அதிபர் முகமட் மேர்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு பங்கம் விளையக் கூடாது என்பதற்காகவே தாம் இதுவரை காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முடிவுகள் வந்ததும் நிலமைகள் மோசமடையும் என்பதை உயர்ந்து தாக்குப் பிடிக்க வலுவற்ற உப அதிபர் அதற்கு முன் தந்திரமாக வெளியேறியுள்ளார்.
இது இவ்விதமிருக்க இன்னொரு ஆபிரிக்க நாடான கொங்கோவில் இரு இனங்களுக்கிடையே நடைபெறும் மோதல் அதி உச்சகட்டமடைந்துள்ளது.
கடந்த வெள்ளி 30 பேர் கொல்லப்பட்டார்கள் இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய 56 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இந்தக் கொலைகள் கடந்த ஆகஸ்ட் – செப்டெம்பர் நடைபெற்ற 100 பேர் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்கலாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறம் வடமேற்கு பாகிஸ்தானில் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் படுகாயமடைந்தார்கள்.
இந்தத் தாக்குதல்களுக்கு தலபான்கள் உரிமை கோரியுள்ளார்கள்.
இதுபோல சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் வடகிழக்கு பகுதியில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் ஐந்துபேர் மரணித்துள்ளார்கள், கடந்த 21 மாதங்களாக நடைபெறும் தாக்குதல்களில் 44.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

0 கருத்துகள்: