தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.12

சிலியில் எரிமலை வெடிக்கும் அபாயம் - ஆர்ஜென்டீன எல்லையில் அபாயகர சிவப்பு விளக்கு எச்சரிக்கை


சிலி, ஆர்ஜென்டினா எல்லைப்பகுதியில்,  அந்தீஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள கொப்பாஹுவே எரிமலை எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என சி லி புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்து கருதி அதியுயர் அபாயகர அறிவிப்பான சி வப்பு விளக்கு அறிவிப்பையும் (Red alert) அந்நாட்டு மக்களுக்கு சிலி அரசு விடுத்துள்ளது.எனினும் சிலி அமைச்சு அந்த எரிமலை
அமைந்துள்ள பகுதியில் உ ள்ள மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான உத்தரவு எதுவும் பிறப்பி க்கவில்லை.

மேலும், எப்போது கொப்பாஹுவே எரிமலை வெடித்துச் சிதறக் கூடும் எனத் தெளிவாகக் கணிக்க முடியாமல் திணறிவருகிறது. கடந்த 2000 ஆண்டில் கடைசியாக வெடித்துச் சிதறிய இந்த எரிமலை ஆர்ஜென்டினா எல்லைக்கு அண்மையில் கொன்செப்கியொன் நகரில் இருந்து 280 Km தென்கிழக்கே கடல் மட்டத்தில் இருந்து 9800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த எரிமலையின் வெடிப்பு சில நேரம் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்ற போதும் அவர்கள் ரெட் அலேர்ட் அறிவித்ததற்குக் காரணம் இதற்கு முன்னரும் இப்படிக் கருதிய போதும் பாரிய வெடிப்பே அதில் நிகழ்ந்திருந்தமையாகும். மேலும் குறித்த எரிமலையின் வெளிப்பாகத்தில்15 Km தூரத்துக்கு எரிமலைக் குழம்பும் மண்சரிவும் ஏற்படும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை இந்த எரிமலை அமைந்துள்ள இடத்துக்கு அண்மையில் உள்ள மாகாணமான பியோபியோவில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி உரிய இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அம்மாநில ஆளுநர் தலைமையில் ஞாயிற்றுக் கிழமையே கலந்துரையாடப் பட்டது.
500 000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் இந்த எரிமலை 1990 இல் மூன்று தடவையும் 2000 ஆம் ஆண்டு ஒரு தடவையும் வெடித்துச் சிதறியதில் கணிசமான மக்கள் வெளியேற்றப் பட்டதுடன் பல பொருட்சேதங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: