ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் இதயப்பகுதி யில் ஆப்கான் பெண் போலீஸ் ஒருவர் அமெரிக்க இ ராணுவ ஆலோசகர் ஒருவரை சுட்டுக் கொன்றுள் ளார்.ஆப்கானிஸ்தான் போலீஸ் படையில் சேர்ந்து ள்ள பெண்களில் ஒருவர் பழி தீர்க்கும் கொலைக்கு ள் நுழைந்தது இதுவே முதற்தடவையாகும்.நான்கு பிள்ளைகளின் தாயான இப்பெண்மணி தாலிபான்க ளுடன் தொடர்பு வரக்கூடிய கரு வளையத்தின் நிழ ல் படாத சூழலில் வாழ்ந்த ஒருவர் என்று
ஆப்கான் அரச தரப்பு கூறுகிறது.ஆனால்போர் காரணமாக பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இவர் அகதியாக இருந்திருக்கிறார், கொலைக்கான பின்னணி குறித்த கேள்விகள் எதற்குமே இவர் பதில்தர மறுத்து வருவதாக ஆப்கான் போலீஸ் விசாரணைகள் கூறுகின்றன.
ஆப்கான் அரச தரப்பு கூறுகிறது.ஆனால்போர் காரணமாக பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இவர் அகதியாக இருந்திருக்கிறார், கொலைக்கான பின்னணி குறித்த கேள்விகள் எதற்குமே இவர் பதில்தர மறுத்து வருவதாக ஆப்கான் போலீஸ் விசாரணைகள் கூறுகின்றன.
அமெரிக்க ஆலோசகரை கட்டிடத்தின் முக்கிய பகுதிக்குள் வைத்து ஒரேயொரு தடவை மட்டும் சுட்டுள்ளார் வயிற்றில் காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் அவர் மரணித்துள்ளார்.
ஆனால் ஆப்கானின் போலீஸ் விசாரணைப் பகுதியின் மனித உரிமைகள் பிரிவில் இவர் இரண்டு ஆண்டுகள் வேலை செய்துள்ளார், இத்தருணம் கிடைத்த மனதைப் பாதிக்கும் தகவல்கள் அமெரிக்கரை போட்டுத்தள்ள வேண்டுமென்ற கோபத்தை இவருள் மூட்டியதா என்பது பெண்மணி வாயைத் திறந்தால்தான் தெரியவரும்.
இந்த ஆண்டு மட்டும் உள்ளக தாக்குதலில் 60 வெளிநாட்டு பிரதிநிதிகள் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள், தலபான்களின் தாக்குதல் வியூகத்தில் இது வெற்றிகரமான தாக்குதலாக இருப்பதை மறுக்க முடியாது.
அதேவேளை பாhPசில் தலபான்களுக்கும், ஆப்கான் அரச தரப்பிற்கும் இடையே நேற்றோடு இரண்டு கட்ட பேச்சுக்கள் முடிவடைந்துள்ளன.
இந்தப் பேச்சுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருப்பதாக முதற்தடவையாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2014 ல் நேட்டோ அணி ஆப்கானில் இருந்து வெளியேற இருக்கும் நிலையில் இரு தரப்பிற்கும் சுமுகமான உறவை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
பேச்சில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக