உலகில் தற்போது வாழ்ந்து வரும் ஆண்களிடையே அதிகூடிய வயதை எட்டியவரும் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நபராகவும் (ஆண் அல்லது பெண்)
என இரு சாதனைகளுக்குச் சொந்தமான நபராக ஜப் பானின் ஜிரோய்மொன் கிமூரா கின்னஸ் புத்தகத்தி ல் இடம் பிடித்துள்ளார். இவரின் வயது 115 வருடங்க ளும் 254 நாட்களும் ஆகும். உலகசாதனைகளின் பதி வுத் தொகுப்பான
கின்னஸ்புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இப்பதிவு இடம்பெ ற்றுள்ளது.
கின்னஸ்புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இப்பதிவு இடம்பெ ற்றுள்ளது.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே அதிக கூடிய வயதை எட்டிய நபராகப் பிரான்ஸின் Jeanne Calment எனும் பெண்மணியின் சாதனையே இன்றுவரை பேசப்படுகின்றது. இவர் 122 வருடங்களும் 164 நாட்களும் உயிர்வாழ்ந்து 1997 ஆம் ஆண்டு உயிர்நீத்தார். இவரையடுத்து அதி கூடிய வயதினராக முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள் அனைவரும் பெண்மணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிமூரா சமீபத்தில் இவரை விட வயது கூடியவராக இருந்து 1998 ஆம் ஆண்டு மரணமடைந்த அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மோர்ட்டென்சென் இன் சாதனையை முறியடித்து உலகில் அதிகூடிய வயதை எட்டிய ஆணாகச் சாதனை படைத்துள்ளார். மேலும் உலகில் தற்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் அதாவது ஆண் அல்லது பெண்ணில் அதிகூடிய வயதுடையவர் கிமூரா என்பதும் குறிப்பிடத்தக்கது
கிமூரா 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி பிறந்தவர் என்பதுடன் தற்போது கியோட்டோ மாநிலத்தின் கியோட்டாங்கோ.நகரில் வசித்து வருகின்றார். மேலும் கிமூராவுக்கு 14 பேரப் பிள்ளைகள், 25 பூட்டப் பிள்ளைகள், மற்றும் 13 கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.இவர் உலக சாதனைப் புத்தகத்தில் அதிக வயதாகப் பதிவு செய்யப்பட்ட 122 வருடங்கள் 164 நாட்கள் சாதனையை முறியடிப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக