தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.12.12

இருமல் மருந்தில் நச்சுப் பதார்த்தம் : பாகிஸ்தானில் மொத்தம் 40 பேர் பலி


சனிக்கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நச்சுப் பதார்த்தம் கலந்திருக்கக் கூடும் என்று சந்தே கிக்கப் படும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மேலும் 5 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.இதன் மூலம் இவர்களுடன் சேர்ந்து நச்சு இருமல் மருந்தா ல் பாகிஸ்தானில் மரணத்தைத் தழுவிய மொத்த மக் களின் தொகை 40 ஐ எட்டியுள்ளது என இஸ்லாமா பாத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற
ன.மேலும் குஜ்ரன்வாலா எனும் நகரத்தில் இந்த இருமல் மருந்தைக் குடித்த மேலும் 8 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் கூ றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிபூன் எனும் பத்திரிகையில் வெளியான தகவலின் படி நவம்பர் தொடக்கத்தில் லாஹூரிலுள்ள டைய்னோ எனும் பகுதியில் இம் மருந்தை உட்கொண்ட 17 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்களையடுத்து பாகிஸ்தானின் பல பாகங்களில் சர்ச்சைக்குரிய இந்த மருந்தை விற்பனை செய்த பல மருந்துக் கடைகள் (Pharmacy) சீல் வைக்கப் பட்டுள்ளன. மேலும் சில உரிமையாளர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதேவேளை சர்ச்சைக்குரிய இந்த மருந்து Dextromethorphan என அழைக்கப் படுகின்றது. மேலும் டைய்னோ இருமல் மருந்தில் இப் பதார்த்தமும் ஒரு மூலப்பொருளாகக் கலந்திருப்பது அடையாளங் காணப் பட்டுள்ளது.

0 கருத்துகள்: