தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.12.12

வயோதிபர்களை அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும் - சீனாவில் புதிய சட்டம்


உலகளாவிய ரீதியில் குடும்ப பந்தங்கள் அவநம்பி க்கை மிகுந்ததாகவும் ஆறுதல் அளிக்காத வண்ணம் இருப்பதாகவும் உள்ள நாடுகளில் சீனாவும் முக்கிய இடத்தில் இருக்கிறதாம்.இந்நிலையில் சமீபத்தில் சீ ன அரசாங்கம் தனது குடும்பக் கட்டமைப்புத் தொடர் பான சட்டங்களில் புதிதாக ஒன்றை வெள்ளிக்கிழ மை இணைத்துள்ளது.இதன் அடிப்படையில் வளர் ந்த சிறுவர்கள் தமது தாத்தா பாட்டி உட்பட வயதான குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி சென்று
பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தவறினால் அவரை நீதி மன்றத் துக்கு கூப்பிட்டு வழக்கு பதியவும் சீன அரசுக்கு உரிமையுள்ளது எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி குறித்த ஒரு நபர் இத்தனை நாட்களுக்கு ஒரு முறை தான் மூத்தோரை சென்று பார்வையிட வேண்டும் என உறுதியான கட்டளையை சீனா பிரயோகிக்காத போதும் நீண்ட காலத்துக்கு தமது முதியவர்களைப் போய் பார்க்காமல் இருந்து போலிசாருக்குத் தகவல் தெரிய வந்தால் அவர் தண்டனைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நாடளாவிய ரீதியில் சீனாவுக்குப் பெரும் பிரச்சினையாக அங்கு மக்கள் தொகையில் பெருகியிருக்கும் வயது முதிர்ந்தோர் விளங்குகின்றனர். இந்நிலையில் இவர்கள் மீது கரிசணை காட்டது புறக்கணிப்பதும் தொடர்வதால் அவர்களில் பெரும்பான்மையினர் மனதளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு உதாரணமாக 90 வயதான மூதாட்டி ஒருவர் தனது மகனால் புறக்கணிக்கப் பட்டு ஒரு அசுத்தமான இடத்தில் இரு வருடங்களுக்கு மேலாக அடைத்து வைக்கப் பட்டிருந்த சம்பவம் கூறப்படுகின்றது.

இதைப் போன்ற பல சம்பவங்கள் அங்கு தினமும் பத்திரிகையில் வெளியாகி வருகின்றன. இதில் முதியவர்கள் சம்பாதித்த சொத்துக்களை அபகரித்து விட்டு அவர்களைப் புறக்கணித்தல் தமது பிள்ளைகளுக்கு சிறிதும் தெரியாமல் தனிமையில் அவர்கள் மரணித்தல் என்பனவும் அடங்குகின்றன.

சீனாவின் சனத்தொகையில் 8% சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் இதில் அரைவாசிப்பேருக்கும் மேற்பட்டோர் தனிமையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட 167 மில்லியன் பொது மக்கள் அங்கு வசிப்பதுடன் அதில் 1 மில்லியன் பேர் 80 வயதுக்கும் அதிகமானோர் எனவும் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

பல வருடங்களுக்கு முன்னர் சீனாவில் கட்டுக் கடங்காது பெருகி வந்த சனத்தொகையினால் அந்நாடு எதிர்கொண்ட பிரச்சினைகளையடுத்து அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை எனும் கொள்கை கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் விளைவால் தற்போது பெருகியிருக்கும் முதியோர்கள் எதிர்நோக்கும் புறக்கணிப்பால் தற்போது இந்தப் புதிய சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: