தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.12

ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக தீர்மானம்: கவுன்சிலர்கள் நிர்வாண போராட்டம்


அமெரிக்காவின் கேஸ்ட்ரோ மாவட்டத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓரின சேர்க்கையாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகளாக இப்பகுதியை பார்க்க வருபவர்களும், பெரும்பாலும் நிர்வாணமாகவே இங்கு சுற்றித் திரிகின்றனர். இந்த நிர்வாண நடமாட்டத்திற்கு தடை விதிக்க கேஸ்ட்ரோ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இந்த முடிவின் மீது சான் பிரான்சிஸ்கோ மேயர் முன்னிலையில்வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சான் பிரான்சிஸ்கோ நகர கண்காணிப்பு

குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர். நிர்வாணமாய் திரிவதை எதிர்த்து 7 பேரும், ஆதரித்து 4 பேரும் வாக்களித்தனர். அந்த நகரின் மேயர் கையொப்பமிட்ட பின்னர், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நிர்வாணமாக நடமாடுவதை தடை செய்யும் சட்டம் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நிர்வாணத்தை ஆதரிக்கும் மாநகராட்சி உறுப்பினர்கள் மேயருக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டனர். அவர்களில் சிலர், திடீரென்று தங்கள் ஆடைகளை அவிழ்த்து வீசிவிட்டு நிர்வாணமாக நின்று மேயருக்கு எதிராகக் குரல் எழுப்பினர். விரைந்து வந்த அவைக் காவலர்கள் அவர்கள் மீது போர்வையை போர்த்தி சமாதானப்படுத்தினார்கள்.

0 கருத்துகள்: