தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.12

உலகின் அதிக வயதுடைய பெண்மணி 116 வது வயதில் காலமானார்!


உலகின் அதிக வயதான நபராக சாதனை படைத்திரு ந்த பெண்மணி தனது 116 வது வயதில் நேற்று அமெ ரிக்காவில் காலமானார்.பெஸ் கூப்பர் (Besse Cooper) எனும் இப்பெண்மணி, ஜோர்ஜியாவில் காலமானர். வயிற்றில் வைரஸ் தாக்கத்தினால் இவர் அவதிப்ப ட்டு வந்துள்ளார். பின்னர் திடிரேன குணமடைந்ததா ல், கிரிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வீடியோ, புகைப்படங்களுக்கு முகம் காட்டுவதற்காக தனது தலைமுடி அலங்காரத்தை சரி
செய்ய வேண்டும் எ ன கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நண்பகல் திடீரென மூச்சுவிட அவதி ப்பட்டு மரணத்தை எய்தியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம், பெஸ் கூப்பர் உலகின் அதிக வயதுடைய நபராக உலக சாதனை படைத்தார். எனினும், அதே வருடம் மே மாதம், பிரேஸிலின் மரியா கோமெஸ் என்பவர் பெஸ் கூப்பரை விட 48 நாட்கள் மூத்தவர் எனும் ஆதாரத்தை நிரூபித்து புதிய உலகசாதனை படைத்தார். ஆனால் அடுத்த மாதமே அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இதையடுத்து இன்றுவரை பெஸ் கூப்பரே உலகின் அதிக வயதுடைய நபராக இருந்து வந்தார்.
பெஸ்கூப்பரின் மறைவு தனக்கு சோகமான நாளை உருவாக்கியுள்ளதாக கின்னஸ் நிறுவனத்தின் கூர்ப்பியல் ஆலோசனை அறிஞர் ரொபேர்ட் யங் தெரிவித்துள்ளார். அவர் பெஸ் கூப்பருக்கு 111 வயது இருக்கும் போது அவரது உடல் மற்றும் மன நலத்தை பரிசோதித்திருந்தார். அந்த வயதில் பெஸ் கூப்பரால் புத்தகங்கள் வாசிக்க முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் பெஸ் கூப்பர் தனது 115 வது பிறந்த தினத்தை நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடியுள்ளார். முதலாம் உலகமகா யுத்தத்தின் போது ஜோர்ஜியாவுக்கு இடம்பெயர்ந்த பெஸ் கூப்பர் இயல்பில் ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார்.
தற்போது பெஸ்கூப்பரின் மறைவை அடுத்து, இயோவாவை சேர்ந்த டினா மன்ஃபிரெடினி எனும் நபர் (115 வயது) உலகின் அதிகவயதுடைய வாழும் நபராக சாதனை படைத்துள்ளார்.

பிரெஞ்சு பெண்மணி ஜீன் கல்மெண்ட், உலகில் நீண்ட வயது வரை வாழ்ந்து மறைந்த மனிதர் எனும் சாதனையை தொடர்கிறார். 1997ம் ஆண்டு அவர் இறக்கும் போது அவருக்கு வயது 122.

0 கருத்துகள்: