இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ் ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று ஹி மாலய இராச்சியமான லடாக்கின் தலைநகர் லேஹ் இல் ஒன்று கூடி லடாக் மாநிலத்தின் ஜம்மு காஷ்மீ ர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலே வானத்தில் தெரி யும் ஒளிரும் பறக்கும் மர்ம பொருட்களை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளனர்.இந்த ஆய்வின் நோக்கம் குறித்த ஒளிரும் பொருட்கள் பறக்கும் தட் டுக்கள் அல்ல என உறுதிப்
படுத்துவதற்காகவாகும். மேலும் இவை சீனாவினால்செலுத்தப்பட்ட வானில் மிதக்கும் விளக்குகளாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். லேஹ் நகரத்தில் இருந்து 160Km தூரத்தில் அமைந்துள்ள பன்கொங் ஏரியின் மேலே மிகுந்த பிரகாசத் துடன் ஆயிரக் கணக்கில் தென்படும் ஒளிர் பொருட்கள் குறித்து விளக்கம் கேட்டும் அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்பதற்குமென முன்னாய்த்த நடவடிக்கையாக இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டிருந்தது.

இவை சீன விளக்குகளாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றிய போதும் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் முறையான நிபுணர்கள் அல்லது நிறுவனம் மூலம் அவையின் நம்பகத்தன்மை குறித்து அறிவதற்கான மதிப்பீடு ஒன்றைப் பெறும் இலக்குடனே இஸ்ரோவிடம் விண்ணப்பித்துள்ளன. பன்கொங் ஏரியின் மேலே ஆரெஞ்சு மற்றும் மஞ்சல் நிறத்தில் பெருந்தொகையான ஒளிர்பொருட்கள் அவதானிக்கப் பட்டுள்ளதாக இந்திய தீபேத்திய எல்லை போலிசாரான ITBP உம் இந்திய அரசுக்கு இது குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் எப்போது லேஹ் இற்கு விஜயம் செய்யவுள்ளனர் எனும் செய்தி இன்னமும் வெளியிடப் படவில்லை.
சீனா தனது ஹிமாலய எல்லைப் பகுதியில் இவ்வாறு பெருந்தொகையான விளக்குகளைச் செலுத்தும் பழக்கத்தை 3 ஆம் நூற்றாண்டில் இருந்தே கையான்டு வந்துள்ளது. இதற்கான காரணம் சீனா தனது எதிரிகளுடன் போரிடும் போது பிறரிடம் உதவி பெறுவதற்கும் இவ்விளக்குகளின் வெளிச்சம் மூலம் வேவு பார்க்கவும் எனக் கூறப்படுகின்றது.
இருந்த போதும் வானில் தெரியும் இந்த ஒளிர் பொருட்கள் 12-18 நிமிடங்களில் திடீரென மறைந்து போவது ஏனென்று தெரியவில்லை என லடாக்கிலுள்ள வானாராய்ச்சிக் கழகத்தின் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக