ஈரான் என்கின்ற நாடு அணு ஆயுத உற்பத்தி மட்டும ல்ல ஏவுகணை அச்சுறுத்தல், பயங்கரவாத ஏற்றுமதி போன்ற காரணங்களுக்கு அடிச்சக்தியாக இருக்கிற து என்று இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.அணு கு ண்டு ஆபத்து உட்பட அனைத்து ஈரானிய ஆபத்துக்க ளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தலைமை யே அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.வரு ம் தை மாதம் 23 ம் திகதி இஸ்ரேலில் நடைபெறவுள் ள பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை எருசெலேமி ல் வைத்து ஆரம்பித்தபோது
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஹமாஸ் அமைப்பு ஏவி, இஸ்ரேலிய தரையில் விழும் எம்.75 ஏவுகணைகள் ஈரானிய உற்பத்திகள் என்பதால் ஏவுகணை முக்கிய விவகாரமாகியுள்ளது.
பாலஸ்தீனர்களை அவமதிக்கும் விதமாக அங்கு அத்துமீறிய 3000 வீடுகளை அமைத்து யூதர்களின் வயிற்றில் பால்வார்த்த நெட்டன்யாகு இப்போதும் அவர்களை போர் சன்னதமூட்டி தேர்தலில் வெற்றிபெற முயன்றுள்ளார்.
அதேவேளை இதுவரை காலமும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை எதிர்த்து தேர்தல் வெற்றிபெற்ற நெட்டன்யாகு இப்போது ஈரான் பக்கமாக கவனத்தை திசை திருப்பியிருப்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இதற்கு முன்னர் ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அகமது நிஜாத் ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டை உலகப் படத்தில் இருந்தே அகற்றுவேன் என்று முழங்கினார்
இப்போது ஈரானை அழிக்க இவர் புறப்பட்டுள்ளார், பதவிக்காக இந்தத் தலைவர்கள் நடாத்தும் அவல அரசியல் சந்தியில் கிடந்து சிரிக்கிறது.
ஈரான் மீதான தாக்குதல் கனவு இப்படிப் போக சிரியாவில் மெல்லிய தளர்வு நிலை அவதானிக்கப்படுகிறது.
ஐ.நா – அரபுலீக்கின் சிரிய அமைதிப் பணியாளர் லக்டர் பராகிமியுடன் சிரிய அதிபர் ஆஸாட் பேச்சுக்களை நடாத்திய பின்னர் சிரிய உள்ளக அமைச்சர் பொது மக்கள் மீது இனிமேல் தாக்குதல் நடாத்தப்பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும் இன்று கருத்துரைத்த லக்டர் பராகிமி சிரிய நாட்டில் ஒரு மேலதிக அரசை அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்த அரசானது அனைத்துத் தரப்பு மோதல்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, புதிய தேர்தலை நடாத்தி அதிகார மாற்றத்தை செய்யும்.
அதேவேளை முன்னர் சிரிய அதிபர் நடாத்திய தேர்தல், அரசியல் சட்ட மாற்றம் போன்ற வெற்று கண்துடைப்பாக இல்லாமல் பூரண மாற்றம் நடந்துள்ளமை மக்களுக்கு வெளிப்படையாக தெரியும்படியாக இது நடைபெறும் என்றும் உறுதி கூறினார்.
அதிபர் ஆஸாத் அடுத்த ஆண்டும் இதே பாணியில் அதிகாரத்தில் இருக்க வாய்ப்பில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக