தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.12.12

அமெரிக்காவில் கடும் பனிப்புயல். 200 விமானங்கள் ரத்து. 2 லட்சம் பேர் மின்சார இன்றி தவிப்பு.


அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர். கடும் பனிப்புயல்–மழைஅமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக

பனி பொழிந்தது. பல இடங்களில் பனிப்புயல் வீசியதுடன் ஆலங்கட்டி மழையும் கொட்டியது. இதனால் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
www.thedipaar.com
2 லட்சம் பேர் தவிப்பு
இதன் காரணமாக வடக்கு டெக்சாஸ், அலபாமாவிலுள்ள அர்கான்சாஸ் ஆகிய இடங்களில் மின்சார தடை ஏற்பட்டு சுமார் 2 லட்சம் பேர் தவிக்கிறார்கள். பல அடி உயரத்துக்கு பனி உறைந்து கிடப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அங்கு மோசமான வானிலை காரணமாக விபத்துகளில் 5 பேர் இறந்தனர். நியூயார்க், நியூஜெர்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் இயங்கவில்லை. புதன்கிழமை இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்தது.
www.thedipaar.com
200 விமானங்கள் ரத்து
இந்த பனிப்புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கும் கடும் மழை, சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக நியூயார்க், வெர்மவுண்ட், நியூ ஹாம்ப்ஷிரே உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 2 அங்குலம் பனிப்பொழிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.இதனை அடுத்து நேற்று 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில கவர்னர்கள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

0 கருத்துகள்: