தெற்கு சீனாவில் ஜியாங் ஸி வட்டகையில் பாலர் வகுப்பு பிள்ளைகள் 15 பேரை ஏற்றிச் சென்ற மினி பஸ் விபத்தில் சிக்கியதில் 11 சிறு பிள்ளைகள் பரிதாப மரணமடைந்தார்கள்.இந்த மினி பஸ் காலநிலை சீர்கேடு காரணமாக திசை மாறி ஏரிக்குள் விழுந்துள்ளதால் அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை ரஸ்யாவில் கடும் குளிர் வேகமாக வளர்ந்து -55 பாகைக்கு குளிர் கீழே இறங்கியுள்ளதால் இதுவரை 123 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
சைபீரியாவின் தென்பகுதியும் இப்போது பனிக்காடாகக் கிடக்கிறது, பொருளாதார நெருக்கடிக்குள்ளும், ஊழலுக்குள்ளும் சிக்குண்டுள்ள ரஸ்யா இப்போது பனியிலும் சிக்குப்பட்டுள்ளது.
வழமையாக மோசமான ரஸ்யப் பனிக்குள் ஜேர்மன் படைகள் போல வெளிநாட்டு படைகள் சிக்குண்டு அழிவதே வரலாறாக இருந்து வந்தது, அந்த நிலை மாறி இப்போது ரஸ்யர்களே பனிக்குள் சிக்கி மடியும் காலம் உருவாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக