தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.12

டெல்லி கலவரத்தில் பலியான கான்ஸ்டபிளின் பூதவுடல் காவல்துறை மரியாதையுடன் தகனம்


டெல்லி கலவரத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவல்துறை கான்ஸ்டபிள் சுபாஷ் தோமரின் பூ தவுடல் இன்று மாலை காவல்துறை மரியாதையுடன், தகனம் செய்யப்பட்டது.உள்துறை அமைச்சர் ஆர்.பி.என். சிங், டெல்லி முதல்வர் ஷீலா தீக்க்ஷித், விமானத்துறை அமைச்சர் அஜித் சி ங், உள்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் டெ ல்லி காவல்துறை கமிஷனர் நீரஜ் குகார் ஆகியோர் இறுதிக்கி ரியைகளில் கலந்து கொண்டனர். கடந்த டிச.16ம் திகதி டெல் லியில் பேருந்தில்
பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு தூக்கிவீசப்பட்ட நிலை யில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவிக்கு நீதி கோரியும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றி பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், டெல்லியில் இந்தியா கேட் முன்றலில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக  அனுப்பப்பட்ட காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூண்ட கலவரங்களில் ஆர்ப்பாட்ட காரர்களின் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி தோமர் படுகாயமடைந்திருந்தார். இந்நிலையிலேயே இவரது உயிரிழப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோமரின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்குமாறு மயானத்திற்கு முன்னால் கூடிய ஒரு குழுவினர் கோஷமெழுப்பினர்.  தோமரின் இரு மகன்கள், மனைவி ஆகியோருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக டெல்லி போலீஸ் கமிஷினர் நீரஜ் குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

தோமரின் உயிர்த்தியாகம் துரதிஷ்டவசமானது என கூறியுள்ள விமானத்துறை அமைச்சர்  அஜித் சிங், பாலியல் பலாத்காரம் தொடர்பில் நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் சுமார் 10,000ற்கு மேற்பட்ட வழக்குகளை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத்தருவதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

எனது சகோதரனுக்கு நடந்தது மிக சோகமான முடிவு என கவலை வெளியிட்டுள்ள தோமரின் சகோதரர் சுரீந்தர் சிங், கலவர சூழ்நிலையை பொருத்தமான முறையில் கையாள்வதற்கு மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுளார்.

மேலும் தனது சகோதரனின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு ஒரு ஒழுங்கு முறையில் இந்த அனைத்து விவகாரங்களையும் கையாண்டிருந்தால் விளைவு வேறுமாதிரி இருந்திருக்கும். நடந்த அனைத்துக்கும் மத்திய அரசும் பொறுப்பு கூறவேண்டியுள்ளது என்றார்.

கலையியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ள தோமர், டெல்லி காவல்துறையில் 1987ம் ஆண்டு இணைந்தது முதல் 77 காமெண்டேஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், தனது பதவிக்காலத்தில் மிக நேர்மையான அதிகாரியாக நடந்துகொண்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுமார் 80,000க்கு அதிகமான காவல்துறையின்தங்களது ஒரு நாள் சம்பளத்தை தோமரின் குடும்பத்திற்கு வழங்க முன்வந்துள்ளனர்.  

0 கருத்துகள்: