தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.12

நீதி கேட்கும் போராட்டத்தில் வன்முறைக்கு இடம்கொடுக்காதீர்கள் : குடியரசுத் தலைவர்


நாட்டுமக்களுக்கு உரையாற்றிய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பெண்களுக்கு பாதுகாப் பு அளிப்பதில் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடை ந்தேன். மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தி னத்தில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை நாம் மறந்து விட
முடியாது.நமதுநாட்டில் பெண்கள் அனைவரும் எல்லா நேர த்திலும் பாதுக்காப்பாக இருக்க நாம் அவர்களுக்காக  இரட்டிப்பு முயற்சி எடுக் க வேண்டும். பெண்களுக்கு பூரண பாதுகாப்பு இருக்கிறது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட இளம் பெண்ணுக்காக நீதி கேட்டு போராட் டம் நடத்தும் இளைய சமுதாயத்தினரின் குமுறல் எனக்கு நன்றாகவே புரிகிற து. எனினும் போராட்டக் காரர்கள் அமைதி காக்க வேண்டும்.

நீதி கேட்டு நடக்கும் போராட்டத்தில் வன்முறை புகுவது என்பது போராட்டத்துக்கே அர்த்தமில்லாதது போல ஆகிவிடும். நீதி கேட்டு நடக்கும் போராட்டத்தில் அமைதி முக்கியம்.  அந்த மாணவி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளேன். மாணவி கற்பழிப்பு வழக்கில் அரசு தேவையன நடடிவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சமீபத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சுபாஷ் தோமல் என்ற போலீஸ்காரர் பலத்த காயமடைந்து இறந்தார்.
இதையடுத்தே,  இளைஞர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பொருமையுடன் இருக்க வேண்டும் என பிரணா முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்: