தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.12

இந்த உலகம் 2013 ல் கட்டுப்பாடில்லாத உலகமாக மாறும் : புதிய ஆய்வு


கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட் டமெடுக்கும் உலக நாடுகள்…பிரிட்டனில் இருந்து செ யற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாய ங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப் பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித் துள்ளது.கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன் னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள்
தலைதெறிக்க ஓடியது போல உலக சமுதாய ம் ஓடப்போதை அத்தனை நிகழ்வுகளும் காட்டுகின்றன.
விலகிச் செல்லும் 2012 ம் ஆண்டின் நிகழ்வுகள் 2013ம் ஆண்டை மேலும் சிக்கலான நாடாக மாற்றும் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்து, அதற்கான சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கை முன் வைத்துள்ளது.
இலக்கற்ற மத்திய கிழக்கு போர்.
கடந்த 21 மாதங்களாக நடக்கும் சிரிய போர் இதுவரை 40.000 பேருக்கு மேல் மனிதப்பலியை எடுத்துவிட்டது, உலகத்தால் அதைத் தடுக்க முடியவில்லை. எதிர்காலம் தெரியாத ஒரு போர் அரபு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
சிரிய அதிபரிடமிருந்து தப்பியோடிய தளபதிகள், முக்கிய உறுப்பினர்கள் அல் நுஸ்ரா என்ற அமைப்பில் இணைந்துள்ளனர், இது அமெரிக்க பயங்கரவாத பட்டியலில் உள்ள அமைப்பு இதை வைத்து தீர்வை எட்ட முடியாது.
மொடரேற் இஸ்லாமிய தலைவர் மவுஸ் அல் கத்தலிப்பை தலைமைப் பாத்திரமாக கொண்டுவரலாமென்றால் அவர் இஸ்ரேலின் நேரடி எதிரியாக இருக்கிறார்.
சவுதி, கட்டார் நாடுகளின் உதவியுடன் போராளிகள் போராடுகிறார்கள் ஆஸாட்டின் மாதங்கள் எண்ணப்பட்டாலும் அடுத்து என்னவென்று தெரியவில்லை.
எகிப்து, ரூனிசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் புதிய தலைவர்கள் மேலைத்தேய ஜனநாயகத்துடன் இணைவாக்கம் காணாமலே இருக்கிறார்கள்.
எகிப்தின் அதிபர் முகமட் மேர்சி அமெரிக்காவுடன் நல்லுறவு வைத்திருந்தாலும் மறுபுறம் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார், ஹமாஸ் இவருடைய வரவுக்குப் பிறகு இஸ்ரேலிய மண்ணில் ஏவுகணைகளை இறக்குமளவுக்கு முன்னேறியுள்ளது.
பாலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரித்தாலும் இஸ்ரேல் அதை ஏற்க மறுத்து 3000 வீடுகளை அத்துமீறி அமைத்து வருகிறது, அதுபோல ஈரானையும் நிறுத்த முடியவில்லை.
மத்திய கிழக்கு உலகத்தின் கைகளை மீறிய நெருப்பு வளையத்திற்குள் ஏறத்தாழ பாய்ந்துவிட்டது.
சீனாவின் அபாயமான நிலை
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மாநாடு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்து பழைய தலைவர் கூ ஜிந்தா பதவி விலகவுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கூ ஜிந்தாவின் மகன் அழகிகளை அதி விலைகூடிய பராரி காரில் ஏற்றிக் கொண்டு உல்லாசமாக சென்று ஒரு சீன குடிமகனை மோதிக் கொன்றுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் போ ஜிலாய் கடும் ஊழல் புரிந்து பிரிட்டன் வர்த்தகர் ஒருவருடைய கொலையில் இவருடைய மனைவி சம்மந்தப்படுமளவுக்கு முன்னேறினார்.
மினிஸ்டர் பிரசிடன்ட் வென் ஜியாவோவின் 90 வயது தாயாரின் வங்கிக் கணக்கில் ஆயிரம் கோடி குறோணர்கள் வைப்பிடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
சீன வங்கிகள் முற்றாகக் கட்டுப்பாடு இழந்து என்றைக்கு வங்குரோத்து ஆகும் என்ற செய்திக்காக ஊடகங்கள் காத்துக் கிடக்கின்றன.
சீன தலைவர்கள் ஏறத்தாழ தமது நாட்டின் கட்டுப்பாட்டை கோட்டை விட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அவலம்
ஐரோப்பிய ஒன்றியம் மிக விரைவாக செம்மறியாட்டு பட்டியில் ஆடுகளை சேர்ப்பது போல 27 நாடுகளை சேர்த்துவிட்டது, இன்று அது சந்தித்துள்ள பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பாயும் செம்மறிகளால் அது முடியவில்லை.
செம்மறிக் கூட்டத்தை மேய்க்க ஒரு மேய்ப்பன் வேண்டும், அப்படி அனைத்து நாடுகளும் ஏற்ற ஒரு முகம் இல்லை.
எழுபதுகளில் இராணுவ ஜிந்தாக்களின் பிடியில் இருந்த ஸ்பானியா, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகள் சர்வாதிகாரிகளின் ஆட்சியில் ஏற்பட்ட தவறுதலால் இப்போது ஈடாடடிவிட்டன.
இத்தாலி நாடு மறுபடியும் பலர்ஸ்கோனி தேர்தலில் போட்டியிடும் அவல நிலைக்கு போயுள்ளது, நாட்டின் பொருளாதாரத்தை பெண் பித்தரான பலர்ஸ்கோனியே மீட்க வேண்டும் என்ற மடைத்தனம் அங்கு தரிசனமாகியுள்ளது.
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் எங்கள் நாட்டுக்குள் காலடி வைக்கக் கூடாது என்று கிரேக்கத்தில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.
அஞ்சலா மேர்க்கல் தமது நாட்டு பொருளாதாரத்தை சிதைத்துவிட்டார் என்று பலர்ஸ்கோனி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐரோப்பாவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் என்று கூறக்கூடிய ஒருவர் கூட கிடையாத அவல நிலை உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு ஒற்றுமைக்கு பெரும் பங்கம் விளைவிக்கும் மேக மூட்டங்கள் வேகமாக நகர்கின்றன.
அமெரிக்காவின் நிலை
இன்றைக்கு அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் எந்த நாட்டை வைத்திருக்கிறது என்று கேட்டால் அதை மதித்து தன் முடிவை மாற்ற ஒரு நாடு உலகில் இருப்பதாகத் தெரியவில்லை இதுதான் சூப்பர் பவரின் இன்றைய நிலை.
றிப்பப்ளிக்கன் கட்சி ரீ பார்டி பிரிவாக பிரிந்து கிடக்கிறது, டெமக்கிரட் கட்சிக்கோ போதிய பெரும்பான்மை கிடையாது.
சான்டி புயல் நியூயோர்க்கை தாக்கியபோது ஏறத்தாழ வங்காள தேசம் போல அமெரிக்கா தடுமாற நேர்ந்ததை உலகம் பார்த்தது.
டெமக்கிரட்டி, றிப்பப்ளிக்கன் ஆகிய இரண்டு சிறு நீரகங்களும் செத்துப்போன நோயாளியாகியிருக்கிறது அந்த நாட்டின் உள்நாட்டு அரசியல்.
இஸ்ரேலையோ, வடகொரியாவையோ, ஈரானையோ, குறைந்தபட்சம் போர்க்குற்றவாளியான சிறீலங்காவை கூட படிய வைக்க அந்த நாட்டு தலைவர் ஒபாமாவால் முடியவில்லை.
ஐ.நாவின் அவல நிலை
முதலாம் உலக மகாயுத்தத்தில் உலகை நெறிப்படுத்திய சர்வதேச சங்கம் எப்படி அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து செல்லாக்காசாகி இரண்டாம் உலக யுத்தத்திற்கு கால்கோளிட்டதோ அதுபோலத்தான் இன்றைய ஐ.நாவின் அவல நிலையும் ஆகியிருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கு கண்காணிப்பாளர் அந்தஸ்த்து வழங்கிய ஐ.நாவின் தீர்மானத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு இஸ்ரேல் 3000 வீடுகளை பாலஸ்தீனத்தில் அத்துமீறி அமைத்துக் கொண்டிருக்கிறது.
போர்க் குற்றவாளியான சிறீலங்காவில் போருக்கு பிறகாவது ஓர் அமைதியை ஏற்படுத்த பான் கி மூனால் முடியவில்லை.
தென்னாபிரிக்காவில் ஜாக்கப் சூமாவின் ஊழல் கரைபுரண்டோடி ஏ.என்.சி எடுத்த சுதந்திரம் ஊழல் வடிவமாக மாறிவிட்டது.
தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான்பற்றி பேச வேண்டிய தேவையில்லை.
ஆகவேதான் அடுத்த ஆண்டு உலகத்தை கட்டுப்படுத்தி நெறியான வாழ்வை ஏற்படுத்துவது கடினம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
தீர்வு என்ன…?
01. இப்போதுள்ள தளர்வற்ற தலைவர்கள் அனைவரும் அகற்றப்பட வேண்டும்..
02. மிக நவீனமாக சிந்திக்கக் கூடிய பிரச்சனைகளை மதித்து ஏற்று தீர்வு காணக்கூடிய புதிய மொடரேற் தலைவர்கள் முன்னணிக்கு வரவேண்டும் என்று தீர்வு கூறுகிறது.
அப்படியான நவீன போக்குடைய உலகத் தலைவர்கள் எவரும் இப்போது அதிகார பீடத்தில் இல்லை என்பதே யாதார்த்தமான உண்மையாகும்.
நன்றி: அலைகளுக்காக கி.செ.துரை

0 கருத்துகள்: