தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.12

ஈரான் அறிமுகப்படுத்திய ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல்.


ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற் றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இதன்போது 2 ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகி ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைக ளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்க முடியும் என ஈரான்
தெரிவிக்கின்றது. மேலும் காற் றுமெத்தை ஊர்தி (Hovercraft)ஒன்றையும் ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரானானது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருகின்றமையை நிரூபிக்கும் ஆதாரமொன்றும் வெளியாகியுள்ளது. இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஈரான் தனது உள்ளூர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க , இஸ்ரேல் உட்பட மேலைத்தேய நாடுகளுடனான உறவை மேலும் சீர்கெடச் செய்யுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

0 கருத்துகள்: