தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.12.12

பாகிஸ்தான் மீண்டும் 2 ஆக உடையும் அணு விஞ்ஞானி


பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில், ’1971-ம் ஆண்டு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் அந்நாட்டின் அணு உலை திட்டத்திற்கு மூளையாக செயலாற்றிய, அப்துல் காதர் கான் என ப்படும் ஏ.க்யூ. கான் கடந்த 14-ந்தேதி ஒரு கட்டுரை எழுதியுள்ளா ர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ஒவ்வொரு நாடும், மேலும் கீ ழுமாக பல்வேறு நிலைகளை சந்தித்து உள்ளன. அந்நாட்டு மக்க ள் எல்லாம் மோசமான காலங்களை மறந்துவிட்டு, நல்ல நிகழ் வுகளை நினைத்து சந்தோஷப்படுகின்றனர்.1971-ம் ஆண்டு டிசம் பர் 16ல் ஏற்பட்ட
பேரழிவில் இருந்து, பாகிஸ்தானியர்களாகிய நாம் எந்த பாட த்தையும் பெறவில்லை. (இந்த நாளில் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே வங்காள தேச பிரிவினை தொடர்பாக நடைபெற்ற 13 நாள் போரில் பாகிஸ்தா ன் படைகள் இந்தியாவிடம் சரணடைந்தன.)
இந்த பேரழிவுக்கு பின்னால் இருந்த காரணத்தை பாகிஸ்தான் மக்கள் வெகு நன்றாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால், நமது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இவற்றை மறந்து விட்டனர்.
அந்த பேரழிவில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 92 ஆயிரம் ராணுவ வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு, வழக்கம்போல், யாருமே பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
1971-ம் ஆண்டு, ஜெனரல் யஹ்யா கான், கிழக்கு பாகிஸ்தான் போராளிகளை நசுக்கி ஒடுக்குவதற்காக ஜெனரல் டிக்கா கானை அனுப்பி வைத்தார். நம் சொந்த மக்களை, நமது ராணுவமே கொல்வதை நாம் கண்கூடாக பார்த்தோம்.
பரவலான அதிகாரம் அளிக்கப்பட்டால், மனிதர்கள் கொடூரர்களாக மாறி விடுவார்கள் என்பது நன்கறிந்த உண்மைதான். அந்த சமயத்தில் தான் பெல்ஜியத்தில் இருந்தேன்.
முஸ்லிம்களை முஸ்லிம்களே தாக்கிக் கொன்ற கொடூரமான காட்சிகளை டி.வி.யில் பார்த்த நான், வேதனையடைந்தேன்.
மேற்கு பாகிஸ்தானின் அதிகார வர்க்கம், கிழக்கு பாகிஸ்தான் மக்களை, பிரிட்டிஷ் ஆட்சியின் போது செய்ததைப் போல் அதிகாரத்தின் மூலம் பணிய வைக்க பார்த்தது. இன்றிருக்கும் ஆட்சியாளர்களும் ராணுவமும் இதே மனப்போக்கை கடைபிடித்து, தங்களை எதிர்ப்பவர்களை நசுக்கி, ஒடுக்கப் பார்க்கின்றது.
இதே நிலை நீடித்தால், அவர்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு போராட வேண்டி வரும். இதன் மூலம் பாகிஸ்தானின் ஒற்றுமை குலைந்து, பேரழிவின் மூலம் இந்த நாட்டை ரத்தம் சிந்த வைக்க வேண்டியதாகி விடும்.
ஆட்சியாளர்கள் டாலர்களுக்கு ஆசைப்பட்டு, ஏழை மக்களையும், வீரர்களையும் தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். இந்த பணம் நாட்டின் பலத்தையோ, பொருளாதாரத்தையோ வளப்படுத்துவதில்லை.
1971-ம் ஆண்டு நீடித்த, அதே மோசமான சூழ்நிலை பாகிஸ்தானில் இப்போது நிலவுகின்றது. எல்லா வகையான சமூகத் தீமைகளும் இங்கு புரையோடிப் போய் கிடக்கின்றது. இவற்றை நாம் சீர்படுத்தாவிட்டால், நாம் மீண்டும் பிளவுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
வெளிநாட்டு போர்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல், ஒதுங்கி இருந்து, நமது சொந்த வீட்டை சீரமைத்துக் கொள்வதே, தற்போதைய அவசிய, அவசரத் தேவையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: