நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள துப்பாக்கித் திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 14.11.2012 அன்று விஜய்யின் வீட்டை முற்றுகையிடச் சென்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.இந்த நிலையில் சென்னையில் துப்பாக்கி பட தயாரிப்பாளர் மற்றும்
இஸ்லாமிய அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததப்பட்டுள்ளது, படத்தில் சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை நீக்க இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தியதாகவும், படத்தில் 10 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பத்திரிகையாளர்கள் சந்தித்து முஸ்லிம்கள் மணம் புன்படும் வகையில் தான் படம் எடுத்திற்காக இஸ்லாமிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார் இச்செய்திகள் நேற்றைய முக்கிய செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக