தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.12

சமூக வலைத்தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு


அரபுநாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்டில் ஆட்சி மாற்றம் கோரி, போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதால், அரபுநாடுகளில், இணைய தளங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.எகிப்து, துனிசியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், கிளர்ச்சியாளர்களின் தொடர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.தற்போது குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும்,
எதிர்கட்சியினர் ஆட்சி மாற்றம் குறித்து போராட்டம் நடத்துகின்றனர்.பல்வேறு இணைய தளங்கள் மூலம், ஆட்சி மாற்றத்துக்கான தகவல் பரிமாறிக்கொள்ளப்படுவதால், இது போன்ற இணைய தளங்களுக்கு அரபு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்டில், இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. புரட்சி ஏற்படுத்துவது சம்மந்தமான பதிவுகளோ புகைப்படங்களோ பதிவிட்டால் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அரசால் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: