சிரிய எதிர் கட்சிகள் மற்றும் அசாத்தின் அரசுக்கு எதி ரான போராட்டக்குழுக்கள் ஒன்றிணைந்து உருவாக் கியுள்ள புதிய கூட்டணிக்கு பிரான்ஸ் உத்தியோகபூ ர்வமாக தனது ஆதரவை அறிவித்துள்ளது.இதன் மூ லம் சிரிய அதிபர் அசாத்துக்கு எதிராக நேரடியாக குர ல் எழுப்பியுள்ள முதல் மேற்குலக நாடாக பிரான்ஸ் இணங்காணப்பட்டுள்ளது. சிரிய எதிர்க்குழுக்கள் ஒ ன்றிணைந்து சிரியாவுக்கு வெளியான
நாடுகடந்த அ ரசு ஒன்றை நிறுவியுள்ளன.அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடு கள் பல இதனை வரவேற்றுள்ள போதும் இப்புதிய கூட்டணி சிரிய மக்களின் பிரதிநிதிகள் தானா என உறுதிப்படுத்த வேண்டுமென கோரி நேரடியான தமது ஆதரவு தர தயக்கம் காட்டி வருகின்றன.
நாடுகடந்த அ ரசு ஒன்றை நிறுவியுள்ளன.அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடு கள் பல இதனை வரவேற்றுள்ள போதும் இப்புதிய கூட்டணி சிரிய மக்களின் பிரதிநிதிகள் தானா என உறுதிப்படுத்த வேண்டுமென கோரி நேரடியான தமது ஆதரவு தர தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், கட்டார் தலைநகர் டோஹாவில் கூடிய இப்புதிய கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இதன் போது வளைகுடா அரபு நாடுகள், இக்கூட்டணிக்கு தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிரிய மக்களின் நியாயமான ஒரே பிரநிதிகள் இக்கூட்டணியினர் தான் என்பதை ஏற்றுக்கொண்டன. இதையடுத்து நேற்று மாலை பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹோலந்து ஓர் அறிவிப்பை வெளியிட்டார். சிரிய மக்களின் நியாயமான பிரதிநிதிகளாக இப்புதிய கூட்டணி இருப்பதை பிரான்ஸ் இணங்கண்டுள்ளது எனவும், இக்குழுவினரே சிரியாவின் எதிர்கால அரசை அமைக்கும் ஆதிக்கம் பெறலாம் எனவும், அல் அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இவர்கள் முனையலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து மேலும் பல மேற்குலக நாடுகளும், சிரியாவின் இப்புதிய கூட்டணிக்கு தமது அங்கீகாரத்தை நேரடியாக தெரிவிக்கும் நிலை தோன்றியுள்ளது. ஒருவருடத்திற்கு மேலான போராட்டத்தின் பின்னர் மேற்குலக நாடு ஒன்றினால் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவென தமது நன்றியை சிரிய போராட்டக்குழுவினர் பிரான்ஸ் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக